My world according to me

Saturday, December 14, 2013

Jackpot dreams!!!

With the jackpot swelling to US$550 million Friday night, the lotto fever has been catching up almost everyone. Before you go any further, one needs to understand that the probability of winning the jackpot has slimmed now. Previously it was 1 in 176 million but now it's 1 in 259 million. That's why you see these many big jackpots building up frequently. If you are wondering how they increase the odds or who are not familiar with the lotto, basically you choose 5 numbers and one mega number. The numbers were selected from 1 to 56. But now they widened that margin ranging from 1 to 75. My colleague would say, it is possible that you may die from a plane crash than winning a jackpot.. why waste your money... save your money. He hated people playing lotto. He thinks so low and cheap of them. I never told him that I buy lotto tickets when it crosses US$100m. Sorry Nirave I hope you ain't reading this!

And if you are planning to come up with an algorithm and invest a few millions to get the jackpot.. guess what.. lottery authority carefully monitors it and you can be disqualified!

Alright.. alright.. let's imagine that you've got the $550 million jackpot.. what you gonna do with that? Finish off  your credit card bills, buy a new home, new car(s), entire new wardrobe, new furniture, new gadgets, home theater, swimming pool, indoor basketball, see Miley cyrus twerking someone, watch your favorite stars (like Selena Gomez) falling off stage while performing (that's a real chance than winning a lotto :) ),  go to live football, baseball, or cricket games, etc etc. Or may be you pull up your bucket list do one by one and add new things to the list, now that you could afford it!

My dear friend Vivek and I would often have this discussion... what are we gonna do, if we ever win it. He and I have very good similar thoughts.. we would buy a 18 wheeler truck that has sleeping room and drive cross country (not for free). He would drive 8 hours and I would drive the next 8 hours and then 8 hours of absolute rest. We both love driving and talking about life, take a topic, discuss for and against, fight each others views and finally never conclude what's right or wrong. The only thing we always agreed is to disagree each other views but respect them and move on!

With all the money that you have now, how much of it can you really spend? May be ten million? Or at the max, I can think of spending 25 million. After that what are you going to do with the rest of the money? Few years back, we had a similar argument on FB and I was saying that I would be able to spend all of it, given a chance. Now that I have lesser hair than before, I admit I was wrong, Ranga! What money can't really buy you is happiness, love and experience in life. What do I mean by that? What if your loved ones isn't able to cope up with studies or have serious illness? Something that money can't buy. With money I think you can buy happiness for temporary period. To sustain it one has to start appreciate, understand and live the life. Money is only a tool to success in life.

Finally, jackpot is a curse. A sudden change in life style with unimaginable amount of money can ruin one's life. There's a study on the jackpot winners and it had documented that majority of the winners haven't had a successful life. Just like professional ball players (Gilbert Arenas, Mike Tyson, Scott Pippen to name a few) lotto jackpot winners couldn't lead a successful life. Dream big, achieve your goals and gradually climb up the financial ladder!

Tuesday, December 10, 2013

ரஜினியும் அவரது ரசிகர்களும்!

டிசம்பர் 12 வந்தாலே ரஜினி ரசிகர்கள் செய்யும் விமரிசையானக் கொண்டாட்டம் எரிச்சலை மூட்டும்!  எனக்கு என்ன வந்தது என்று கண்டுக் கொள்ளாமல் இருந்துவிடலாம்தான். ஆனால் இவர்கள் ஒவ்வொரு வருடமும் செய்யும் கொண்டாட்டங்கள் காணும் போது எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஒருமுறை எழுதிவிட்டால், அதனை புரிந்துக்கொண்டு எதாவது ஒரு ஜீவனாவது தெளிவு பெறுவார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். சரி எனக்கு ஏன் பிடிக்கவில்லை? இரண்டே காரணங்கள். ஒன்று அவர் தகுதியற்றவர் எனபதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இரண்டாவது, ரசிகர்களுக்கு வேறு வேலை இல்லையா? ஏன் இப்படித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்? இதனை விரிவாக அலச வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதைச் சொல்ல சரியான நாளும் நெருங்க, அதற்கான முயற்சியிது!

எல்லோரையும் போல ஒரு ஈர்ப்பு ரஜினியிடம் எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது. கொஞ்சம் முதிர்வு வந்தவுடன் சற்று விலகி அவர் தகுதியானவரா என்று எண்ணிப் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் ஏன் அவர் பிரபலமானார் என்றால் என்னால் ஒரு காரணமும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. பின்னர் ஏன் நமக்கு அவரை பிடித்திருந்தது என்று தீவிரமாக யோசித்ததில் எனக்குத் தோன்றியது இதுதான். பொதுவாக ஒரு விஷயம் பிரபலமடைந்தால், அது தனக்கும் பிடிக்கவில்லை என்று சொன்னால் எங்கே தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று பயந்து தனக்கும் அந்த விஷயம் பிடித்திருக்கிறது என்றுச் சொல்லி, பின்னர் அதற்கான காரணத்தைத் தேடி  நமக்கு நாமே சமாதானம் செய்துக் கொள்கிறார்கள் என்றுத் திடமாக நம்புகிறேன். ஒருவரைப் பிடிப்பதற்கு ஒரு திடமான காரணமோ, செயல்திறனோ, ஆளுமையோ, திறமையோ ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அப்படி ஏதாவது ஒன்றாவது இருக்கிறது என்று தேடிப் பார்த்தால் ஒன்றே ஒன்றுதான் எனக்கு தெரிந்தது. அவரின் கோமளித்தனம்! சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, ஒரு ரூபாய் காசை தன் உடலை 360 டிகிரி சுத்தி வரச் செய்வது, காலில் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்துவது, பறந்து பறந்து தரையில் படாமல் எதிரிகளை அடிப்பது என்று எண்ணற்ற கோமாளித்தனமே தெளிவாகத் தெரிகிறது. இவரின் படங்களில் பல படங்கள்  கதை என்று ஒன்று ஒரு துளிக்கூட இல்லாமல் சரி இவரை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்கள். இவர்தான் இப்படி என்றால் இவருடன் நடிப்பவர்கள் செய்யும் கொடுமை சொல்லி மாளாது. கொடிப் பறக்குது படத்தில் ரஜினியின் (ஏ.எல்.ராகவன்) தந்தையாக வருபவர், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியில் சுட்டுவிட்டு,  இரண்டு ரீலுக்கு ஃப்ளாஷ்பேக் சொல்லுவார். இன்னொரு படத்தில் ரஜினியின் தந்தையாக வருபவர், கயிற்றால் விமானத்தின் வாலுக்கு சுருக்குப் போட்டு ஒரு கம்பத்தில் கட்டி நிறுத்திவிடுவார் (மாவீரன் திரைப்படம். நிறுத்தியவர் சமீபத்தில் மறைந்த தாராசிங்).

இவருக்கும் டி.ஆர் ராஜேந்தருக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. டி.ஆர் சமீபத்தில்தான் தன்னையே இப்படி காமெடியனாக ஆக்கிக் கொண்டுள்ளார். தன்னிடம் எப்போதோ இருந்த தன் திறமைகளை ரசிக்கிறார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு, தன்னைக் காட்சிப் பொருளாக காட்டுகிறார் என்றால் மிகையாகாது. ரஜினியிடமும் இதைத்தான் (கோமாளித்தனத்தை) அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றால் இந்த கட்டுரையே அவசியமில்லை. ஆனால் இப்படி ஒரு சமூகமே தங்களை மறந்து அவரைத் துதிப்பதும், வழிபடுவதும், ஆராதிப்பதும் எனக்கு புரியாத புதிர்.

சரி அவரின் திரைப்படங்கள் நன்றாக இல்லை. அவரது திரைக்குப் பின்னால் வாழும் வாழ்க்கையாவது சிறந்த உதாரணமாக இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. அவரது பொது வாழ்க்கையை நான் 1996 தேர்தலுக்கு பின்னரே கூர்ந்து கவனிக்கிறேன். 94-95ல் ஆர்.எம்.வீரப்பனுக்கு நேர்ந்த கொடுமையை அவர் மீது சுமத்த முடியாது. அது ஜெ.வின் அராஜக முடிவினால் நடந்தது. அதற்கு ரஜினி பொறுப்பு ஏற்கமுடியாது. இருந்தாலும் அதுதான் அவரின் அரசியலுக்கு வருகிறேன் என்று பூச்சாண்டிக் காட்டியதற்கு பிள்ளையார் சுழியிட்டது. 96ல் இவர் சொன்ன ஒரு வாக்கியம், "ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது." இதை சன் டிவி மீண்டும் மீண்டும் வெளியிட்டு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. என் கண்ணோட்டத்தில் ஜெ. மீது இருந்த வெறுப்பு அதற்கு முன்பாகவேத் தொடங்கிவிட்டது. எப்போது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு 100கோடிச் செலவு செய்து திருமணம் செய்து வைத்தாரோ அன்றே மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைத்தான் அவர் சொன்ன "ஆண்டவந்தான் காப்பத்தனும்" டயலாக் :) தெளிவில்லாத அரசியல் பார்வை தொடங்கியது அப்போதுதான்.

1996-2001 திமுக ஆட்சி செய்தது. இவர்களும் தமிழ்நாட்டை எப்படி ஆண்டார்கள் நான் சொல்லித்தான் தெரியனும் என்றில்லை. 98ல் கோவை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதை மூடி மறைத்து ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டார்.  ''இப்போதும் நல்லாட்சிதான் நடக்கிறது. இன்னொரு தடவை இங்கே குண்டுவெடிச்சா கலைஞர் சார் ரிஸைன் பண்ணிடுவார்!'' அட என்ன ஒரு தெளிவு பாருங்கள்?! :) தெளிவில்லாத அரசியல் பார்வை - 2

இந்தத் தெளிவை வேறு விதத்தில் உபயோகித்துக் கொண்டார் ரஜினி. தனது திரைப்படங்களில் தவறாமல் அரசியல் சார்புடைய வசனங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். முத்துவில் மீனாவுக்கு சொல்வதாக ஜெ.க்கு சொன்னது. "நான் எப்போ வருவேன் எப்படி வருவேனு தெரியாது. ஆனா கரெக்ட் டைமுக்கு வருவேன்" என்றெல்லாம் சொல்லித் தெருக்கோடி ரசிகனைத் தன் வசத்தில் வைத்துக் கொள்ள் தவறவில்லை. அவன் மூலம் கிடைக்கும் பணம் அவருக்கு தேவையாக இருந்தது.

ரஜினி-25 என்று ஒரு விழாவை ஏற்பாடு செய்து அதில் லட்சம் லட்சமாகச் சம்பாதித்தார். அது அவருக்குத் தெரியாமல் நடந்தது, லதா செய்தது என்று யாராவதுச் சாக்குச் சொன்னால், அவர்கள் காதில் எனக்கு தெரிவது வித விதமான பூக்கள் :)  அவரது துணைவியார் தான் நடத்தும் பள்ளிக்கு இதில் வரும் லாபம் போய் சேரும் என்று சப்பைக்கட்டுக் கட்டினார். அந்த பள்ளியில் சேர நீங்கள் பல லட்சங்களின் அதிபதியாக இருந்தால்தான் அனுமதி. உதாரணத்துக்கு சிம்பு அங்குத்தான் படித்தார். (இன்னொருத் தனிக் கதை சிம்பு- ஐஸ்வர்யா காதல் எபிசோட்கள்.  தனுஷோடு திருமணத்துக்கு முன் சிம்புவுக்கு ஒரு ஃபோன் உரையாடல் பதிவு ஒன்று நீங்கள் கேட்கவேண்டும் :) சரி அது வேறு கதை, அதை இன்னொரு நாள் வேறொரு கதையில் விலாவாரியாக பார்ப்போம் )

2004ல் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் நடந்த ஒரு பாராட்டு விழாவில் எந்த ஜெ.வை, "ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது" என்று 96ல் சொன்னாரோ, அதே ஜெ.வை. "தைரியலட்சுமி" என்று திருவாய் மலர்ந்தார். தெளிவில்லாத அரசியல் பார்வை -3

 இதையெல்லாம் கூட மன்னிக்கலாம். ஆனால் பாபா படப் பிரச்னையின் போது பா.ம.க.வினரிடம் மல்லுக்கு நிற்கச் சொன்னார். இதனால் சரியாக நினைவில்லை.. இரண்டா அல்லது ஒரு அல்லது அதற்கு மேலா ரசிகர்கள் அந்த கட்சியினரிடம் சண்டைப் போடு இவருக்காகச் செத்தார்கள். இதையெல்லாம் துச்சமாக எண்ணி, அவருடைய மகளின் திருமணத்திற்கு ராமதாசுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்றாரே.. அதை எந்த ரகத்தில் சேர்ப்பது? இதற்கு மேலா ஒருவன் அவரின் பச்சோந்தி நிலைப் புரியாமல் இருக்கும்? இதற்கும் மேலா ஒருவன் ரசிகனாய் இருக்கவேண்டும். சிந்தியுங்கள் நண்பர்களே! தெளிவில்லாத அரசியல் பார்வை - 4

சஞ்சய் தத் குற்றம் நிரூபிக்கப்பட்டு மார்ச் மாத இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளி சஞ்சய்க்கு வக்காலத்து வாங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினி. பொது மன்னிப்பு வழங்கி அவரது தண்டனையைக் குறைத்து வெளியில் விட ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார். தெளிவில்லாத பார்வை - 5

நெய்வேலியில் சினிமா உலகமே (ஆமாம் இவங்க உண்ணாவிரதம் இருந்து என்ன பிரயோஜனம்??)  காவிரிக்காக உண்ணாவிரத போராட்டத்தில் இறங்க. அதெல்லாம் நீர்த்து போகும் படி, இவர் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று உட்கார்ந்தாரே, அதெல்லாம் எப்படி தமிழன் மறந்துவிடுகிறான்?  (தெளிவில்லாத பார்வை - 6)

ரஜினி - நடிகை லதா எபிசோட் பலருக்கும் தெரிந்த அரசல் புரசலான உண்மை. ஆனால் ஏன் எம்.ஜி.ஆர் அப்படி சிறையெடுத்து அடித்து துவைத்தார் என்று ஆராய்ந்து பார்த்ததில் ஒரு திடுக்கிடும் தகவல். நடிகனாவதற்கு முன்னால், இந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் எம்.ஜி.ஆரின் காஞ்சித் தலைவன் திரைப்பட சுவரொட்டியைச் சாணி அடித்திருக்கிறார். அது எப்படியோ மக்கள் திலகத்திற்குத் தெரிந்தது. இந்த லதா-ரஜினி மேட்டர் வந்தப்போது வன்மமாகத் தீர்த்துக் கொண்டனர் எம்.ஜி.ஆரின் அடிப் பொடிகள். ஆக, தலைவன் அப்பவேத் தமிழினத்தின் மீது ஒரு காழ்ப்பு இருந்திருக்கிறது! இது எங்கே புரியப் போகிறது நம்ம விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு!

 சரி ரஜினியின் அப்பழுக்கற்ற(!!) பொது வாழ்க்கைப்  பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு இப்போதைக்கு (தற்காலிக)  முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, அவரது ரசிகர்கள் செய்யும் அலப்பரைப் பார்ப்போம். ரஜினித் திரைப்படம் வெளியாகும் தினத்தன்று இவர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லி மாளாது. கட் அவுட் ஒன்று வைத்து அதற்கு சூடம் காட்டுவது, பால் அபிஷேகம் செய்வது, தாரை தப்பட்டம் முழங்க ரீல் பெட்டியை எடுத்து வருவதும் பொது மக்களுக்கு இடையூறு செய்கிறது என்றால் அவர்களுக்கு எங்கே புரிய போகிறது. திரைப்படம் ஓடும் மூன்று மணி நேரம் பேப்பரைக் கிழித்து அந்த திரையரங்கத்தையே அசுத்தப் படுத்தி விடுவார்கள். முதல் பத்து நாட்களுக்கு உள்ளே உட்கார்ந்து அமைதியாக பார்க்க முடியாது.

எனக்கு நேர்ந்த சம்பவங்களில் ஒன்று. ஒரு முறை என் மகளுக்காக பல் பரிசோதனைக்கு சென்றிருந்தேன். அங்கேயிருந்த டாக்டர் இந்தியர் ஆனால் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர். பேச்சு எங்கெங்கோ சென்றது. இறுதியாக அவர் கேட்டக் கேள்வி என்னை வெகுவாக கோபமூட்டியது. அவர் கேட்ட கேள்வி, "ரஜினி நடந்துச் சென்ற பாதை மண்ணை நீங்கள் எல்லாம் திருநீராக இட்டுக் கொள்வீர்களாமே" என்றாரே பார்க்கலாம். நான் இல்லை என்று மறுத்துவிட்டு கோபமாக வெளியேறிவிட்டேன். இதுதான் தமிழர்களாகிய ரஜினி ரசிகர்கள் எனக்காக விட்ட அடையாளம். அந்த டாக்டர் செய்தது தவறு என்றாலும், ரசிகர்களாகிய நீங்கள் தமிழனுக்கு வாங்கித் தந்திருக்கும் அவப்பெயர் இதுதான். இதற்கு நீங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். ஆனால் நீங்கள் செய்யப்போவது என்ன என்றுத் தெரியும்!! இந்த கடைசி வரி வரை படித்திருந்தால் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. நீங்களே உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுக் கொண்டு பதில் அளித்துக் கொள்ளுங்கள். இறுதியாக, நான் தமிழன்தான் ஆனால் ரஜினியை ஒரு நடிகனாக மட்டுமே பார்ப்பவன். கோச்சடையன் வெளியாகும் தினத்தன்று திரையரங்கில் சந்திப்போம் :) :)

என் அம்மா வழி பாட்டி ராஜாதி ராஜா படம் பார்த்துவிட்டு சொன்னது இது. ஏண்டா நான் நேத்து டிவில பார்த்த படத்துக்கே கூட்டிட்டி வந்தீங்க? என் பாட்டி டிவியில் பார்த்த படம் போக்கிரி ராஜா.  ராஜாதி ராஜாவும், போக்கிரி ராஜாவும் ஒரே கதைக் களம்! என் பாட்டிக்கு புரிந்தது ஏன் தமிழ்நாட்டுக்கு புரியல!