Monday, November 02, 2015
Weekend morning drive is always a pleasant one for me. Whether it is a short drive or long drive, it doesn’t matter. Roads are free, no wait at signals and I can freely think about anything. This morning when I read what Arvind Kejriwal said about Dadri lynching, connected to me instantly. Soon after that, I was driving my daughter to Tamizh school and had been mulling about the same. Was he really right? Or is it another political drivel? I wanted to ponder more on that. Let’s look at two violent things that had happened in the last 30+ years.
Aftermath of Indira’s assassination (1984)
The first thing that is vivid to me was the pogrom that followed Indira’s assassination. Indira was killed by her own two (Sikh) guards on Oct 31st. The violence started exactly 31 years ago today and continued for 3 days. The key figures Jagdish Tytler, Sajjan Kumar and HKL Bhagat were seen distributing money, arms and kerosene to several groups to incite violence against Sikhs. It was a planned attack with the help of Delhi police for the next three days. Nearly 3000 sikhs were killed.
Former central minister Jagdish Tytler was worried that very small amount of Sikhs were killed in his constituency, which in his opinion had undermined his position in the ruling Indian National Congress party of India. MP Sajjan Kumar was spotted in a white jeep commanding the mob on the streets to destroy Sikhs’ property, family and kids. Late minister H.K.L. Bhagat was seen giving money and assurance to not worry about the aftermath but continue inciting violence. Mob was rolling on the streets with the chants, “Teach Sikhs a lesson.” Tires were garlanded on Sikhs and burnt alive.
In Feb 2005 Nanavati commission submitted its report. None of the three were punished. Above all that, soon after Rajiv sworn in as PM, he answered to a reporter’s question as, “When a large tree falls, earth is bound to shake” justifying the riots. It is a complete shame to India even today. Only in India can a PM can get away saying it. 1984 December election, India voted Rajiv with a thumping majority. 404 seats. Violence against Sikhs were not only forgiven but rather justified. The final report of 184 pages by Nanavati commission says that the mob’s anger is a valid one. Arvind Kejriwal was right. All those perpetrators should have been punished. Instead we turned a blind eye and decorated them as our guardian angels. Shame :(
Godhra riots and aftermath (2002)
On Feb 27th 2002, Sabarmathi express was on Godhra railway station. A group of Hindu pilgrims were returning from Ayodhya after performing “Purnahuti Maha Yagna” sponsored by VHP at a problematic site Babri Masjid. Four bogeys of Sabarmathi Express were set on fire by local Muslims and 59 pilgrims were burned to death. (A commission was set to inquire about this. 11 death penalties, 20 were sentenced to life imprisonment.) This triggered three days of inter-communal violence. Once again, it was a planned and orchestrated violence against Muslims. Nearly 800 Muslims and 250 Hindus were killed in this violence. Unofficial figure states 2000 Muslims were killed.
[Unrelated but worth quoting: During this violence set ablaze, Bal Thackeray, leader of Shiv Sena said "Muslims are a cancer to this country. Cancer is an incurable disease. Its only cure is operation. O Hindus, take weapons in your hands and remove this cancer from your roots".]
Media described that the state government didn’t do enough to stop the violence. It even said it’s a state sponsored terrorism than a communal violence. Investigation were a complete mess just like the Kanchi temple manager Sankarraman murder case. Haren Pandya who was a minister at that time was killed in suspicion. Mr. Pandya testified that a meeting was held in the evening of the Godhra train burning convened by the then Gujarat CM and the police were asked not to obstruct the Hindu rage. The US Commission on International Religious Freedom noted that minorities are subjected to mass killings periodically. It is my belief that the state government could have controlled the violence in but failed to do so. Yet again, Indians forgot, forgave and endorsed Godhra riots. Voted the then CM to become PM in 2014 Lok Sabha Elections.
Indians forgive the crime-tainted political leaders (like Ms. Jayalalitha) without a second thought. Judicial systems work on a snail pace. It is hard to see a politician getting punished. Even if they did, they were given the bare minimum (Laloo Prasad Yadav). Kanchi temple manager Sankarraman case was the best example. 89 witnesses turned hostile. All the 24 accused were acquitted. The key aide Kathiravan was murdered. The investigation officer SP Premkumar died of heart attack (yeah right!).
Talking with a good friend of mine, he mentioned that the award returnees will be treated with good will if Congress returns to power in the next Lok Sabha elections. He is right. India is plagued with favoritism and nepotism.
Finally, if only the mass murderers and perpetrators are punished severely and banished, incidents like Dadri lynching will not happen again. I can only yearn for Pandiya King Neduncheliyan who gave his life after realizing his grave mistake of killing Kovalan.
Wednesday, June 17, 2015
உலக திரைப்படங்களும் தமிழ் திரைப்படங்களும்!
(கவனிக்க: நான் இன்னும் “காக்கா முட்டை” பார்க்கவில்லை. அதனால் இந்த பதிவு அந்த திரைப்படத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை)
திரைப்படங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலோடு முற்றிலும் கலந்துவிட்ட ஒன்று. அதனை பிரிக்க நினைப்பதும், கர்ணனின் கவசக்குண்டலத்தை பிரிக்க நினைப்பதும் ஒன்றே. அந்த அளவுக்கு நம்மிடையே நீக்கமற கலந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஃபேஸ்புக்கில், `தமிழ் சினிமா ஹிந்தி சினிமாவைவிட 50 வருடங்கள் பின்னடைந்து இருக்கிறது’ என்று எழுதினேன். அதன் பிறகு நண்பர்கள் சிலர் வெகுண்டெழுந்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஏன் அப்படி சொன்னேன் என்பதனின் விளக்கம் தேவை என்று எனக்குப் பட்டது.
திரைப்படம் ஒரு பொழுதுப்போக்கு அம்சம் மட்டுமே. அதற்கு இத்தனை முக்கியத்துவம் தேவையில்லை என்று ஒரு சாரர் முதலிலேயே புறம் தள்ளி விடுவார்கள். அவர்கள் இதற்கு மேல் படிக்கத் தேவையில்லை. உங்கள் பொன்னான நேரத்தை மற்ற முக்கிய பணிகளுக்கு செலவிடுங்கள். தமிழ் படங்களில் சகாப்தம் வரை எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. ’சகாப்தம்’ யார் படம் என்று கேட்டீர்கள் என்றால் நீங்களும் தயவுசெய்து இதற்கு மேல் படிக்கவேண்டாம். அதனைவிட முக்கியமான ஒன்று, என்னிடம் தமிழ் படங்களே சிறந்தது என்று வாதிட வேண்டாம். ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் படங்களை ஒரு மாமாங்கத்துக்கு ஒன்று என்ற கணக்கில் பார்க்கும் உங்களுடன் என்னால் வாதிட முடியாது! :)
அதிகம் திரைப்படங்களை பார்க்காத சிலர், “நீ எப்படி அப்படி சொல்லலாம். யாம் அறிந்த மொழிகளிலே டமிலே சிறந்தது. அதுப்போல டமில் திரைப்படங்களும் சிறந்தது. காஞ்சனா2, மங்காத்தா, அசல் போன்ற திரைக்காவியங்கள்..” என்று எவரேனும் புறப்பட்டீர்கள் என்றால் நிற்க. உங்களோடும் நான் வாதிட விரும்பவில்லை. இப்போதே சொல்லிவிடுகிறேன், “டமில் திரைப்படங்களே சிறந்தது! நன்றி!!”
ஹிந்தி திரைப்படங்கள் 90களின் இறுதியில் தாவூத்தின் பிடியிலிருந்து வெளியே வரத் தொடங்கியது. அதுவரை பியார், மொஹபத், தில், லவ் என்ற கோணத்திலேயே திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது என்று என்னால ஆணித்தரமாகச் சொல்ல முடியும். குறிப்பாக சமீபத்தில் வந்த திரைப்படங்கள் அதனை நிரூபணம் செய்கிறது. ஹிந்தி திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களா என்றால்.. வெகு சில படங்களை மட்டுமே சொல்ல முடியும். இருப்பினும் தமிழ் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது தரம் பல மடங்கு உயர்வாகவே இருக்கிறது. Kahaani, Special 26, Baby, OMG, Piku அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது வரை இந்த திரைப்படங்களை பார்க்கவில்லையென்றால் தயவுசெய்து பார்த்துவிட்டு வந்து சண்டைக்கு வாருங்கள்!
சரி எது உலக திரைப்படம்? தன்னுடைய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும், வாழ்க்கை முறையையும், மிகையில்லாத நடிப்போடும், இயல்பான அழகியலோடு சொல்லும் எந்த திரைப்படமும் உலகத் திரைப்படமே. (ஈரான்) மஜித் மஜிதியின் படங்கள் அதற்கு சிறந்த உதாரணம். அவருடைய படங்களில் "Children of heaven, Song of sparrows” மிக முக்கியமான படைப்புகள். மிடில் ஈஸ்ட் என்றாலே Sheik/Prince பணக்காரர்கள் என்று எண்ணும் நம்மை ஈரானில் உள்ள விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அநாயசமாக சொல்லியிருப்பார். இதுவரை தமிழ் படங்கள் அதனை சொல்லவில்லையா என்றால்.. மன்னிக்கவும்.. இது வரை நான் பார்க்கவில்லை. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் சொல்லாததா என்று உங்கள் இருக்கையிலிருந்து கூவுவது கேட்கிறது. அவை தமிழில் வந்த சிறந்த திரைப்படம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு! அவ்வளவே!!
நாளொன்றுக்கு ஒரு திரைப்படமாவது பார்த்துவிடும் எனக்கு ஒரு கட்டத்தில் தமிழ் திரைப்படங்கள் போதவில்லை. மெல்ல மலையாளம், தெலுகு, ஹிந்தி, ஹாலிவுட், ஈரானியன், கொரியன், ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு படங்கள் என்று விஸ்தரித்து பார்க்கத் தொடங்கினேன். அதற்கு நெட்ஃபிலிக்ஸ் மிகவும் உதவுகிறது. எல்லா மொழிகளிலும் குப்பைப் படங்கள் வருகிறது. மறுக்க முடியாது. ஆனாலும் அவ்வப்போது பரந்து விரிந்த இருண்ட பிரபஞ்சத்தில் மிளிரும் நட்சத்திரமாக ஒரு சில நல்லப் படங்கள் வருகிறது.
அப்படித்தான் யாரோ ஒருவர் “எனக்குள் ஒருவன்” (கன்னடப் படம் லூசியாவின் தமிழாக்கம்) பார்த்துவிட்டு, `நோலனுக்கே (Christopher Nolan) சவால்’ என்று பதிவிட்டிருந்தார். படித்துவிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டேன். எனக்கு அவருடைய அறியாமையை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. இன்னும் சிலர் (விசிலடிச்சான் குஞ்சுகள் மட்டும் அல்ல சில பிரபலங்களும் அதில் அடக்கம்) அஜித் மங்காத்தாவில் (பில்லாவா?) டூப் போடாமல் ஹெலிகாப்டர் சீன் நடித்திருக்கிறார் என்று பிணாத்திக் கொண்டு இருந்தனர். 1987ல் மலை உச்சியிலிருந்து டூப் போடாமல் பறக்கும் பலூனுக்கு ஜாக்கி சான் தாவுவார்.
இன்னொன்றும் அவசியம் சொல்லவேண்டும். ஏன் தமிழ் சினிமாக்கள் தரமிழந்து இருக்கிறது என்று ஆராய்ந்தால், அந்த குற்றம் நம்மையே சாரும்! செயற்கையான/பகட்டுப் படங்களுக்கு தரும் ஆதரவை நாம் என்றுமே ‘தரமான’ திரைப்படங்களுக்கு தந்தது இல்லை. அப்படியே தரமான படம் வந்துவிட்டாலும், திரையரங்குக்கு சென்று ஆதரவு தருவோர் எத்தனை பேர். சென்ற வாரம் “Dil Dadakane do" பார்க்கப் போயிருந்தேன். படம் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் இருந்த போதும், அரங்கம் நிறைந்து இருந்தது. நண்பர்கள் நாங்கள் தனித்தனியே உட்கார வேண்டியிருந்தது! எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக ரசித்தனர்! திரையில் ஹீரோவின் பெயரை பார்த்து பரவசம் அடையவில்லை! நறுக்கிய பேப்பர் துகள்களை எறியவில்லை!
மைனா திரைப்படத்தை தனி ஒரு ஆளாக பார்த்ததை நண்பர் ரமேஷ் அடிக்கடி சொல்லி வேதனைப்படுவார். திரைப்படம் வந்த ஆறு மணி நேரத்தில் திருட்டு விசிடி பதிவு இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதனை பார்க்கும் எவருக்கும் என்னிடம் தயவு செய்து வாதம் செய்ய வரவேண்டாம்.
எது ’தரம்’ என்றே தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எனது வாதம் என்றும் புரியப் போவதில்லை!

யார் கடவுள்?
’யார் கடவுள்?’
இதைப்பற்றி எழுத வேண்டுமென்று ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். நான் “எழுத வேண்டும்” என்று சொன்னவுடனே பலருக்கு மனசுல இப்படித்தான் தோன்றியிருக்கும், “ஆமா இவன் பெரிய எழுத்தாளன்.. எழுதி கிழிக்க போறானாக்கும்.. கழுத.. என்ன தெரியும் இவனுக்கு? பெருசா பேச வந்துட்டான்.” நீங்கள் நினைப்பது உண்மையே. கண்டிப்பாக நான் அந்த லெவலில் மமதையா யோசித்து அப்படிச் சொல்லவில்லை. நான் அந்த லெவலுக்கு இந்த ஜென்மம் மட்டும் இல்லை இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தகுதியான எழுத்தாளர்கள் பக்கத்துல கூட நிற்க எனக்கு தகுதி வந்துவிடாது. ஆனாலும் மனதில் பட்டதை, எனக்கு தெரிந்த உண்மைகளை, கருத்துகளை சொல்ல வேண்டுமென்று எப்பொழுதுமே ஒரு உந்துதல் என்னிடம் இருக்கும். சொல்ல நினைப்பதை சுதந்திரமாகவும், பட்டவர்த்தனமாகவும் எழுதிவிட துணிந்துவிட்டேன். அதன் விளைவுதான் இது.
முதலில், ’யார் கடவுள் ’ என்ற சர்ச்சை/விவாதம் ஏன் வந்தது? நான் தமிழன். என் சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள் பெரிதும் சராசரி தமிழனுக்கு இருக்கும் அதே நேர்பாதையில்தான் என்னுடையதுமிருக்கும். இதில் வியப்பதற்கோ, ஐயப்படுவதற்கோ, கேள்வி கேட்பதற்கோ ஒன்றுமில்லை. சமீப காலமாக என்னுடைய பார்வையில் தமிழனுக்கே உரித்தான முரண்பாடுகள் மிகத் தெளிவாக எனக்கு தெரிகிறது. அதனைக் நான் எப்படி அணுகுகிறேன், பார்க்கிறேன் என்பதே இந்த பதிவின் முயற்சி.
இரண்டாவது, கடவுள் என்றவுடன் நான் மதம், ஜாதி பற்றி ஏதேனும் சொல்லப்போகிறேனா என்று எண்ண வேண்டாம். அதனைப் பற்றியும் எழுதவேண்டும். அது இன்னொரு நாளைக்கு.
கடவுள் என்றால் என்ன? அகராதியில் தேடினால் இப்படித்தான் வருகிறது, “ a superhuman being or spirit worshiped as having power over nature or human fortunes” ஹூம்ம்ம் ஏன் கடவுள் அவனது படைப்பில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா? அப்படியே என்றால் ஏன் மனித உருவில்தான் இருக்கவேண்டும்? இந்த அடிப்படையிலேயே தமிழன் அடைந்து விடுகிறான் என்று எனக்கு தோன்றுகிறது. அதனாலயே சக மனிதன் ஒருவன் அவனது துறையில் புகழ் உச்சியில் இருந்தால் அவனை கடவுளாகவே ஆக்கிவிடுகிறார்கள். மனிதன் என்றில்லை.. நமக்கு உதவும் ஏர், மாடு, கதிர் அரிவாள், சைக்கிள், படி, புத்தகம், இசைக்கருவி அனைத்தும் கடவுள்.
எங்கிருந்து வருகிறது இந்த தாழ்ச்சி? ஏன் இந்த தாழ்ச்சி? எப்படி இதனை அணுகியிருக்க வேண்டும்?
ஒருவர் மிக சிறப்பாக பாடுகிறார் என்றால் அவரும் சக மனிதன்தானே? அவருக்கு மட்டும் சிறப்பாக செயல்பட ஏதேனும் அமைக்கப்பட்டதா என்ன? இல்லையே. அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது என்ன? அவரின் கடின உழைப்பு, அவருடைய குரல் வளம், அவருக்கு அமைந்த வாய்ப்புகள் மிக முக்கிய பங்குகள் வகிக்கின்றன.
ஒரு சிறந்த பாடகனின் வெற்றியில் எங்கிருந்து வருகிறது தெய்வம்? கேட்டால் “தெய்வம் கொடுத்தக் குரல்” என்பர் சிலர். இன்னும் சிலர் சற்று கடந்து வந்து, காலமே கடவுள் என்பர். பாடகராக முயற்சி செய்த சிலரோ, தங்களது முயற்சி சராசரி மனிதனால் ஆன முயற்சி. அவரோ வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது அசாத்திய முயற்சி. அந்த அசாத்தியம் தெய்வத்தினால் கொடுக்கப்பட்டது. அவரே தெய்வம் என்று எண்ணுகிறார்கள்.. நம்பியும் விடுகிறார்கள். இந்த over obsessiveness விட்டொழிக்கவே முடியாதா? பாடகரின் திறமையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே? அந்த ’தெய்வ’ பாடகரிடம் நெருங்கி பழகுங்கள். அவருக்குள் இருக்கும் சராசரி மனிதம் உங்களுக்கும் புரியும்.
பாடகன் என்று மட்டுமில்லை. நடிகனிடம், இசையமைப்பாளரிடம், அரசியல்வாதியிடம், சாமியாரிடம், விளையாட்டு வீரரிடம் நம் மக்கள் வைத்திருக்கும் அலாதி பிரியம், பக்தி, வழிபாடு இதையெல்லாம் சொல்லி மாளாது. இந்த பலஹீனங்கள் பெருவாரியான தமிழ் மக்களிடம் காணலாம். இந்த அடிமைத்தனம் ஏதோ ஒரு வகையில் புதைந்திருக்கிறது. தன்னால் புரிந்து கொள்ள முடியாத, தன்னுடைய சக்திக்கு மீறிய முயற்சி, திறன், ஆற்றல் எவரிடமாவது இருந்தால் அவன் கடவுள். ஏன் அந்த கடவுள் தன்மை பெரிதும் கலை (அதுவும் திரைப்படம்) சார்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது? ஏன் ஒரு விவசாயிடம் காண முடியவில்லை? நம்முடன் வேலை செய்யும் சக ஊழியனிடம் ஏன் கண்டு கொள்ள முடியவில்லை? மிக எளிது. சக ஊழியனால் எப்படி முடிந்தது என்று கணக்கிட தெரிவதாலும், நம்மாலும் சாத்தியப்படுமென்பதாலும் அவன் சக மனிதன். தெய்வத்திற்கு நிகரில்லை.
”சரி, நான் சினிமா ஹீரோவை/இசையமைப்பாளரை வழிபடுகிறேன். நான் கட் அவுட் வைப்பது கற்பூரம் ஏற்றுவது என்னுடைய தனி மனித உரிமை. அதனால் உனக்கு என்ன ஆகிப்போச்சு? ” என்று காட்டமாக சிலர் கத்துவதும் காதில் விழுகிறது. ஏன் சிலர் அதனை கேள்வியாகவும் பல முறை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். ”எனக்கு பிடித்ததை நடிப்பு வடிவமாகவோ, இசை வடிவமாகவோ, நகைச்சுவை வடிவமாகவோ இவர்கள் தருகிறார்கள். இதில் என்ன தப்பு?”
சரி ஒரு இசைக்கலைஞனை ரசிப்பதற்கான அளவுகோல், மதிப்பீடுதான் என்ன? அதற்கு எல்லைகளோ, வரைமுறைகளோ இல்லையா என்ன? அதற்கு தெய்வ வழிபாடுதான் உச்சமா? ஒரு இசையமைப்பாளருக்கு உச்சபட்ச அளவுகோல் என்ன? Bach, Beethoven, Mozart அவர்களை யாரவது கடவுள் என்று சொல்லியிருக்கிறார்களா? அவர்களை ஜீனியஸ் என்று வேண்டுமானால் சொல்லுவார்கள். அவர்களுக்கு தெய்வ வழிபாடு இருக்கிறதா என்ன? இன்றைய இசையமைப்பாளர்களின் பங்குதான் என்ன? அவர்களுடைய இசை தனி மனித சந்தோஷத்திற்கு மீறி ஏதாவது நன்மை பயத்திருக்கிறதா? சரி இன்னிக்கு கடவுள்னு இசையமைப்பாளர் பின்னாடி போறவங்க எத்தனை பேர் அவருடைய பாடல்களை இணையத்தில் திருட்டுத்தனமாக டவுன்லோட் செய்யாமல், காசு கொடுத்து வாங்கியிருக்கிறீர்கள்?
ஒரு முறை நடிகருக்கு வாழ்த்து சொல்லுகிறேன் என்று ஒரு காணொளி எடுத்தார்கள். அதில் ஒரு அம்மணி, “நான் அவரின் தீவிர ரசிகை. என் பிள்ளையையும் அப்படியே வளர்க்கிறேன். என்னுடைய பேரப்பிள்ளைகளையும் அப்படியே வளர்ப்பேன்” என்றார். ஒரு கணம் திகைத்து போனேன். என்ன மாதிரியான சமூகமிது? இந்த நடிகர், தன் சொத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு எழுதி வைக்கிறேனு ஒரு பெரிய விழா எடுத்து புரூடா விட்டார். அதுலேர்ந்து ஒரு பைசா எந்த கடைக்கோடி தமிழனுக்கு உபயோகம் சென்றடைந்திருக்கிறதா? நடிகைக்கு கோவில் கட்டுகிறான். அரசியல்வாதிக்காக கூட்டம் கூட்டமாக மொட்டையடிக்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். அழகு குத்திக் கொள்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பிரதமர் ஆனதும் மோடிக்கு கோவில் நிறுவியுள்ளனர். அரசியல்வாதி ’யார் ஊழல் செய்யவில்லை. ஜெ. மட்டும் என்ன விதிவிலக்கா?’ என்று புண்ணாக்கு லாஜிக் பேசுகிறார்கள்.
மொத்தத்தில் நம்மிடையே ஒரு தத்துவவாதி இல்லை. சாதனையாளர் இல்லை. நம்மை நாமே உயர்த்தி பிடிக்க நமக்கு தெரியவில்லை. நமக்கென்று ஒரு கோட்பாடு இல்லை. மதிப்பீட்டின் எல்லைகளை இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்கிறோம். எல்லோரும் ஜீனியஸ்.. எல்லோரும் கடவுள்.. எல்லோரும் சாதனையாளர்கள்..என்னிஷ்டம்.. என் உரிமை.. இப்படித்தான் இன்றைய சமுதாயம் இருக்கிறது. நான் கடவுள். நீ கடவுள். மனிதனே இவ்வுலகில் இல்லை? இது எங்கு போய் முடியும்?
கிளாசிக்கல் இசை, திரையிசை, சினிமா, நகைச்சுவை, அரசியல், கலை, ஆன்மீகம் எதை வேண்டுமானாலும் ரசியுங்கள். அதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் கடவுளை கண்டேன்... காத்தாடியைக் கண்டேன் என்று உங்களையே நீங்கள் சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அவற்றுக்கு ஒர் தீர்க்கமான எல்லையை நிறுவுங்கள். அதனை ஒரு போதும் மாற்றாதீர்கள். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் எந்த நிகழ் கால நடிகரோ, இசையமைப்பாளரோ, அரசியல்வாதியோ, சாமியாரோ கடவுளுக்கு இணை இல்லை. ஒரு போதும் அவர்களை கடவுளோடு ஒப்பீடு செய்யாதீர்கள். புரியும்படி சொல்லியிருக்கேன் என்று நம்புகிறேன்!

Monday, May 04, 2015
விடியும் வரை காத்திரு
எப்போதாவது முக்கியமான ஒருத்தரையோ அல்லது முக்கியமான பொருளுக்காகவோ
காத்திருந்திருக்கிறீர்களா? இடைப்பட்ட நேரத்தில் வெறுமனே
காத்திருக்கவேண்டும். முக்கிய நபரை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள் பார்த்து
தகவல் சொல்வதற்காக அல்லது முக்கிய பொருளை பெறுவதற்காகவோ பல மணி நேரம்
காத்திருக்கவேண்டும். அந்த பல மணி நேரமும் வேறு எந்த வேலையையும் பார்க்கப்
போக முடியாது. இடைப்பட்ட நேரத்தில் ஒருவேளை அவர் வந்திட்டு போயிட்டார்னா?
அந்த மூன்று நான்கு மணி நேரம் நம்மைச் சுத்தி என்னதான் நடக்கும்? அப்படி
ஒரு நாள் நள்ளிரவு முதல் விடியும் வரை நான் முதல் முறையாக விழித்திருந்து
காத்திருந்தேன். எதற்கு? 35 லிட்டர் பாலுக்காக.
அடுத்த நாள் நெறைஞ்ச முகூர்த்த நாள்! சித்தப்பா வீட்டு கிரஹபிரவேஷம்!
சித்தப்பா என்னிடம், “தம்பி, நீயும் உன் மாமனும் கும்பகோணம் போயி, அண்ணா பால் டெப்போல 35 லிட்டர் பால் வாங்கிட்டு வந்திருங்க. அங்கத்தான் மொத்தமா கெடைக்கும். வெள்ளன போகணும். இங்கேர்ந்து காலைல போனா பால் கெடைக்காது. அதனால நீங்க ரெண்டும் பேரும் ராத்திரி கடைசி பஸ்ல கும்போணம் (கும்பகோணம்) போயி, சினிமாவுக்கு போங்க. அப்படியே சினிமாவ முடிச்சிட்டு டெப்போக்கு போங்க. மொத பால் ரெண்டு மணிக்கெல்லாம் வந்திரும். வாங்கிட்டு வெரசா வீட்டுக்கு வந்து சேருங்க. காலைல நீங்க வாங்கிட்டு வர்ற பாலுலதான் எல்லாத்துக்கு காப்பி. இந்தா பணம்.”
“சித்தப்பா.. நானா? இவ்வளவு பெரிய வேலைய என்கிட்டச் சொல்றீங்களே?” சற்றுத் தயங்கினேன்.
“டேய்.. வளர்ந்து கெட்டவனே.. நீ பத்தாவது முடிச்சிட்ட. இந்த வயசுல உங்கொப்பனும் நானும் பண்ணாத சேட்டையில்ல. நீ சின்னப் புள்ளையா என்ன? அதான் கூட உனக்கு தொணையா மாமன் வர்றான்ல. அப்புறம் என்ன? சினிமாவுக்கு போனு நானே சொல்றேன்.. அப்புறம் என்னடா?” குரலில் கடுமை தென்பட்டது.
“அதுக்கில்ல சித்தப்பா. நான் ராத்திரி வெளிய தங்கினது இல்ல. அம்மா எதாவது சொல்லுவாங்களோ.. அதான் யோசிக்கிறேன்.”
“நான் சொல்லிக்கிறேன்... நீ போயிட்டு வாடா” ஒரு முடிவோடுதான் அவரிருந்தார்.
“சரி சித்தப்பா.” வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டேன். நான் தயங்கினது அத்தை மகள் இருக்கிறாளே... அவகிட்ட அன்னிக்கு நைட்டு பேசணும்னு நெனச்சேன். சிவ பூஜைல கரடியாட்டம் சித்தப்பா காரியத்த கெடுத்திட்டாரு. ஒருவேளை தெரிஞ்சுதான் செஞ்சிருப்பாரோ?
இரவு எட்டு மணி ஆனது. சாப்பாடு முடிஞ்சதும் நானும் என் மாமனும் (அப்பா-சித்தப்பாவின் கசின் பிரதர்.. வயது என்னைவிட நான்கு வயது பெரியவன்(ர்). ஒரே வயதை ஒத்தவன் என்பதால் வாங்க போங்க மரியாதை இல்லை.. வாடா போடாத்தான். கும்பகோணம் கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்) கெளம்ப தயாரானோம்.
சித்தப்பா என்னிடம், “டேய் மொத பஸ்சு வர்றதுக்குள்ள வந்திருங்கடா. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. முகூர்த்த நாள் வேற... பாலுக்கு ஏக கிராக்கியா இருக்கும். கவனமா கொண்டு வந்து சேர்த்திருங்க. ஒரு லிட்டர் பாக்கெட்டா கேட்டு வாங்குங்க. அரை லிட்டராயிருந்தாலும் பரவால.“
”சரி சித்தப்பா. அம்ம்ம்மா நான் கும்போணம் போயிட்டு வர்றேன்” உரக்கக் கத்தினேன். அத்தை மகள் காதில் விழட்டுமேயென்று. கடைக்கண் பார்வை கிட்டாதா என்ற எண்ணமே. அத்தை மகள் எட்டிப் பார்த்தாள். பார்வையில் ஆயிரம் வினா.. கணப் பொழுதில் பலாயிரம் சம்பாஷணைகள். இதயம் வெளியே குதித்து ஓடியது அவளிடம். என் புருவத்தை வளைத்து தலைச் சாய்த்து “போயிட்டு வர்றேன்” என்றேன் சாடையில். பதிலும் வந்தது. நிறைவான மனதுடன் கிளம்பினேன்.
“ஏண்டா சம்முவம் (சண்முகம்) எந்த படத்துக்குடா போறது?”
“புதிய பாதை போலாம்டா?”
“யாரு படம்டா அது?”
“புதுமுகம்டா. படம் நல்லாயிருக்காம். போவோமா?”
“சம்முவம் நீ சொல்லிட்டா அதுக்கு அப்பீலே இல்ல. படம் போறதுக்கு முன்னாடி எனக்கு பரோட்டா ஆம்லெட் சாப்பிடணும்டா...”
“சரிய்ய்ய்.. ஏண்டா நாம ஆம்லெட் சாப்பிடுறது அத்தைக்கு (என் பாட்டி) தெரிஞ்சா.. பத்ரகாளி ருத்ர தாண்டவம் ஆடிருவாடா.”
“விட்றா. யாருக்கு தெரியப் போகுது? முட்டைத்தானே... நாம என்ன முட்டையோட அம்மாவா திங்கப்போறோம்?!”
பேசிக் கொண்டிருக்கும் போதே 3ஆம் நம்பர் வண்டி கும்பகோணம் பேரூந்து நிலையம் வந்துவிட்டது. மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அந்த நேரம்கூட என்ன அவசரமோ, பலர் முண்டியடித்துக் கொண்டு பஸ்சிலிருந்து இறங்கினர். இறங்கியதும் எனக்கு கும்பகோணம் புதிய பேரூந்து நிலையம் மிகப் பெரியதாக தோன்றியது. இயல்பிலிருந்து சற்று விலகி வந்து பார்க்கும் பார்வை அலாதியானது. தினமும் அலுவலகம் சென்று வரும் நாம், ஒரு நாள் அலுவலகம் போகாது, காலை பதினொரு மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்து அருகில் இருக்கும் பூங்காவுக்கு சென்றால் மொத்தமும் அந்நியமாகத் தோன்றும். இத்தனைக்கும் அது பழகிய பூங்காவாகத்தான் இருக்கும். இருந்தாலும் இயல்பிலிருந்து விலகி பார்க்கும் போது நம் மனதின் பார்வை புதிதாகயிருக்கும். அப்படித்தான் அன்றிரவு கும்பகோணம் பேரூந்து நிலையம் இருந்தது.
ஒரு புறம் நகரப் பேரூந்தும், மறுபுறம் மொஃபசில் பேரூந்தும் வரிசையில் நின்றன. பழக்கடை, பூக்கடை, பேப்பர் கடை, டீக்கடை, சாப்பாட்டு கடை என்று பஸ்ஸடாண்ட் ஏகத்துக்கும் பிசியாக இருந்தது. நாமளும் பெரிய ஆளாயிட்டோம்டா என்கிற எண்ணம் கரை புரண்டு ஓடியது. மனதில் ஒரு கெத்து முளைத்தது. ரோட்டுக்கடை ஒன்றில் அமர்ந்தோம்.
இலையை போட்டுக்கொண்டே, “என்ன சாப்பிட வேணும்?” என்றார் அங்கே வேலை செய்பவர். தூக்கிக் கட்டிய கைலி, கருப்பு பனியன், பனியனுக்கு வெளியே வெள்ளையில் கருப்பு கட்டம் போட்ட சட்டை. பட்டன் திறந்து விடப்பட்டிருந்தது. சுருள் முடி.. முறுக்கிய மீசை. பார்ப்பதற்கே கொஞ்சம் மிரட்டலான ஆளாகத் தெரிந்தார்.
எனக்கு பரோட்டா என்றால் ரொம்ப பிடிக்கும். “ரெண்டு பரோட்டா. அப்படியே ஆம்லெட் ஒன்னு. வெங்காயம் தூக்கலா.”
சண்முகம், “நெய் ரோஸ்ட் ஒன்னு.. ஒரு ஆம்லெட்.”
எப்போதும் வேக வேகமாக சாப்பிடும் நான் அன்று என்னமோ சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். ”மெட்ராஸ், திருச்சி, புதுக்கோட்ட, மதுரை, சேலம், நாமக்கல், பண்ருட்டி, விழுப்புரம்”னு ஆங்காங்கே கூவிக் கூவி பஸ் ஏஜெண்ட்டுகள் மக்களை கூப்பிட்டுக் கொண்டு இருந்தனர். குடும்பத்தை அவசர அவசரமாக இழுத்துக் கொண்டு விழுப்புரம் பஸ்சில் ஏறினார் ஒரு அப்பா. திருமண இளஞ்ஜோடி ஒன்று தஞ்சாவூர் பஸ்சில் ஏறினர். ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள் சைக்கிளில் ரோந்து போய்க்கொண்டு இருந்தனர். சூடான கல்லில் கொத்து பரோட்டா போடும் சத்தம் காதில் விழுந்தது. தள்ளு வண்டியில், அரிக்கேன் வெளிச்சத்தில் கடலை வறுக்கும் சத்தமும் கேட்டது. ’சொய்ங்.. சொய்ங்.. டண்டண்டண்ண்ண்.. சொய்ங்.. சொய்ங்.. டண்டண்டண்ண்ண்..’ ஒரு ரிதமிக்கா கடலையை வறுத்துக் கொண்டிருந்தார் அந்த பெரியவர். டிராக்டரில் ஒரு பெரிய கூட்டமே வந்து இறங்கியது. வந்த வேகத்தில் திருவாரூர் போகும் பஸ்சில் ஏறியது. மொத்தத்தில் இரவு இளமையோடு இருந்தது.
பொடிநடையா வந்து செல்வம் திரையரங்கத்தில் இரவுக்காட்சி பாத்து முடித்தாயிற்று. சண்முகத்துக்கு கும்பகோணம் அத்துப்படி. அண்ணா பால் டெப்போவுக்கு போய் சேரவும் மணி ஒன்றரை ஆச்சு. பரிச்சியமில்லாத இடம். தெரு விளக்குகளைத் தவிர வேறு ஒன்றும் எரியவில்லை.
டெப்போ வாசலில் நின்றதும், இருட்டிலிருந்து ஒரு குரல், “யாருப்பா.. என்ன வேணும்?”
குத்து மதிப்பா குரல் வந்த திசையை நோக்கி, “பால் வாங்க வந்தோம்ங்க. இங்கத்தானே கொடுப்பாங்க?”
வாயில் சிகரெட் பத்த வைத்துக்கொண்டே, “ஆமா. எத்தினி லிட்டரு?” என்று கேட்டவர், முகம் தெரிந்தது. அந்த இரண்டு விநாடிகளில், கனத்த உருவம் என்று தெரிந்தது. மீசை காது வரை வளைந்து நெளிந்து இருந்தது.
“35 லிட்டர்”
“பால் வண்டி வர இன்னும் நேரமிருக்கே தம்பிகளா. பணத்த கட்டின ரசீது வெச்சிருக்கீங்களா?”
“இல்லீங்க. கொடவாசலேர்ந்து வர்றோம். பாலுக்கு சொல்லி வெக்கலீங்க”
“என்ன தம்பி.. இன்னிக்கு முகூர்த்த நாளு... எப்பவும் பால் எக்ஸ்ட்ரா இருக்கும். இன்னிக்கு இருக்கிறது சந்தேகம்தான்.”
நானும் சண்முகமும் ஒருவரையொருவர் என்ன செய்வது என்றுத் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்.
அவரே தொடர்ந்தார், “இதுக்குத்தான் முன்னாடியே ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கனும். போவட்டும். 2 1/2 மணிக்கு திருப்பனந்தாள்லேர்ந்து ஒரு வண்டி வரும். அதுல வர்ற பால் ரெகுலர் கஸ்டமருக்கு. மிச்சம் இருக்கிற பால் எடுத்து வெச்சிருவோம். அதுக்கப்புறம் தஞ்சாவூர்லேந்து 3 .45க்கு இன்னொரு வண்டி வரும். ரெண்டுலயும் என்ன தேறுதோ பாப்போம்.”
“சரிங்கய்யா. ஒருவேளை இல்லைனா வேற எங்க கெடக்கும்?” மொத மொத என்னையும் சண்முகத்தையும் நம்பி ஒரு பொறுப்ப கொடுத்திருக்காங்க. பால் இல்லைனு போய் சொன்னா ரொம்ப அசிங்கமா இருக்குமேனு ஒரு கவலை.
”தம்பிகளா.. என்கிட்ட இருக்கிற பால தர்றேன். ரொம்ப கம்மியா இருந்துச்சுனா.. நேரா தஞ்சாவூர் பால் டெப்போவுக்கு போங்க. நாஞ்சிக்கோட்ட போற வழியில இருக்கு. அங்க போங்க” இது அக்கறையா இல்லயா கிண்டல் பண்றாரானு இருட்டில் தெரியல.
”அந்த சிமெண்ட் கட்டைல உக்காருங்க. பால் வந்ததும் பாப்போம்”
சண்முகம் உக்கார்ந்த அஞ்சு நிமிஷத்தில் கால் நீட்டி தூங்கிவிட்டான். பால் விற்கும் பெரியவர் சண்முகத்தை விட பெரிய கொரட்டை விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு மட்டும்தான் தூக்கம் வரவில்லை. மணி 1:50 ஆகியிருந்தது. சுற்றியும் பார்த்தேன். கும்பகோணத்தின் முக்கிய தெருவாக எனக்கு பட்டது. தஞ்சை செல்லும் வழியாக இருக்கும். சரக்கு/காய்கறி தாங்கிய தள்ளு வண்டிகளும், டிவிஎஸ்-50களும் மார்க்கெட் செல்லும் திசையில் போய் கொண்டிருந்தன. மக்கள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது. சிலர் நடந்தும், பலர் சைக்கிளிலும் இரண்டு திசைகளிலும் சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் ஒரு டீக்கடை ஒன்றிருந்தது. எதிரே சிட்டி யூனியன் பேங்க் இருந்தது. வாசலில் ஒரு காவலாளி. அவனும் ஒரு நாற்காலியில் உக்கார்ந்த் நிலையில் தூங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய ஹோட்டல் இருந்தது. டீக்கடையில் ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்றது. உள்ளிருந்து நாலு கரைவேட்டிகள் இறங்கினர்.
“நாலு டீ போடுப்பா” என்ற சத்தம் எனக்குத் தெளிவாகக் கேட்டது. எப்படியும் ஐம்பது அடி தள்ளியிருக்கும்.இருந்தாலும் கேட்டது. இதனாலத்தான், ’பகல்ல பக்குவம் பாத்து பேசு.. இரவுல அதுவும் பேசாதே’னு பெரியவங்க சொன்னாங்கப் போல. கொஞ்ச நேரத்துல அந்த அம்பாசிடர் காரும் போனது. மணி இரண்டு ஆகியிருந்தது. இவ்வளவு நடந்தும் மணி இரண்டுதானா?
கொசுத் தொல்லை வேறு. காதுக்கு அருகே உய்ய்ய்ங் உய்ய்ய்ங் என்று சத்தமிட்டப் படி பறந்து கொண்டிருந்தது. அவைகளெல்லாம் ஓய்வெடுப்பதில்லைப் போலும். நான் அந்த டீக்கடைக்கு போனேன்.
”ஒரு டீண்ணே.. சக்கர தூக்கல” என்றேன். டீ மாஸ்டரை கூர்ந்து கவனித்தேன். அழுக்கேறிய பனியன். வாய் நிறைய வெற்றிலை பாக்கு.குதப்பிக்கொண்டே வேலை பார்த்தார்.
கட கடவென்று ஒரு டீ கிளாஸ்சில் சக்கரையை அள்ளிப்போட்டு சூடாக பாலை ஊற்றி அதன் மேல் டீ தண்ணி ஊற்றி, ரெண்டு முறை தலைக்கு மேலாக தூக்கி அடித்து ஊற்றி கொடுத்தார். எனக்கு டீ கொடுத்துவிட்டு மடியிலிருந்த சுருக்கு பையிலிருந்து புகையிலை எடுத்து வாயில் போட்டார். சட்டைப் பையிலிருந்து ரூ.1 எடுத்துக் கொடுத்தேன். டீயை பொறுமையாக குடித்துவிட்டு மெதுவாக நேரத்தைப் பார்த்தேன். 2.12. ச்சே நேரம் நகரவேயில்லையே என்று நொந்தபடியே திரும்ப டெப்போவுக்கே வந்தேன். எங்கும் நிசப்தம்.. கூர்ந்து கேட்டால் வண்டுகளின் சத்தம். கொரட்டை சத்தம். அவ்வப்போது போகும் எண்ணெய் போடாத சைக்கிளின் கிரீச் சத்தம். எனக்குத் தூக்கம் அரவே வரவில்லை. இரவு இவ்வளவு நீளமானதா? படுத்தால் உறங்குகிறோம். காலையில் எழுந்திரிக்கிறோம். இடையில் 7-8 மணி நேரமாவதே அது வரை நான் உணர்ந்ததில்லை.
தூரத்தில் ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு பால் வண்டி போலவே இருந்தது. ஸ்பீட் குறைய ஆரம்பித்தது. அட பால் வண்டி வந்துவிட்டது என்று கொஞ்சம் சந்தோஷம். ஆனால் கடையைத் தாண்டி அந்த டீக்கடையில் நின்றது. கையில் கட்டியிருந்த வாட்சில் நேரத்தை பார்த்தேன். 2:29. எப்படியும் இன்னும் பத்து பதினைந்து நிமிஷத்துக்குள் வந்திடும். நம்பிக்கையோடு காத்திருந்தேன். வேற வழி?
2:47க்கு வந்தது பால்வண்டி அது வரை தூங்கிக் கொண்டிருந்த பெரியவர் சடாரென்று எழுந்தார். பட படவென அந்த இடத்தில் இருந்த எல்லா ட்யூப் லைட்டயும் போட்டார்.
“டேய் ராமலிங்கம்.. ராமலிங்கம்.. எழுந்திரிடா வண்டி வந்திருச்சு.” என்று சத்தம் போட்டார். கடைக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தவன் விருட்டென எழுந்தான். கைலியை தூக்கிக் கட்டி வேகவேகமாக பால்வண்டியின் கதவினை தொறந்தான். மிக வேகமாகவும் லாவகமாகவும் அனைத்து பால் ட்ரேயையும் இறக்கினான். பெரியவர் ஒரு பேப்பாரில் வந்த மொத்த ட்ரே கணக்கையும் குறித்தார். காலா, அறையா, ஃபுல்லா என்றுக் கேட்டுக்கொண்டே இருந்தார். ராமலிங்கம் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான். என்ன என்று எனக்கு பார்க்க ஆவலாகயிருந்தது. அருகில் சென்று பார்த்ததும் புரிந்தது. ஒவ்வொரு ட்ரேயிலும் பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் பாக்கெட்டுகளாக அடுக்கியிருந்தது. அனைத்தையும் மூன்று பகுதிகளாக பிரித்து வைத்து. மேலே ஐஸ் கொட்டினார்கள். வண்டி டிரைவரிடம் ரசீது ஒன்றைக் கொடுக்க அவன் புறப்பட்டுச் சென்றான்.
பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும், கூட்டிக் கழிச்சு பார்த்தவர், “தம்பி, வந்திருக்கிற பால் கணக்கப் பாத்தா.. பதினைஞ்சு லிட்டர் தேறும். ஒரு பையைக் கொடு “ என்றார். நான் பையைக் கொடுத்தவுடன் அதில் பதினைந்து பாக்கெட்ட அடுக்கிக் கொடுத்தார். ”ராமலிங்கம், டேய்ய்ய், இத உள்ள இருக்கிற ஐஸ் பொட்டி பக்கத்துல வை” என்றார். அவன் எடுத்த வைத்துவிட்ட அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் கும்மிருட்டாக ஆனது. மணி இப்போது 3:10.
பெரியவர், “இன்னும் ஒரு வண்டி வரவேண்டியிருக்கு. 3:30..3:45க்கு வரும். அதுவரைக்கும் அப்படியே படுத்துக்கோ தம்பி” என்று சொன்ன அடுத்த நிமிடம் அவர் தூங்கிவிட்டார். 20-25 நிமிடம் இங்கே என்ன நடந்தது என்று புரிந்து கொள்வதற்கே எனக்கு சற்று நேரம் பிடித்தது. இது எதுவுமே தெரியாமல் சண்முகம் தூங்கிக் கொண்டிருந்தான்.
3:20க்கு எனக்கு லேசாக தூக்கம் வந்தது. அப்படியே காலை நீட்டி சுவற்றில் சாய்ந்துக் கொண்டே கண்ணை மூடினேன். ஒரு வேளை 25 லிட்டர்தான் கிடைக்கிறது என்றால் வேறு என்ன செய்யலாம் மீதமுள்ள பத்து லிட்டருக்கு என்று யோசிக்கத் தொடங்கினேன். தஞ்சாவூருக்கு போய் வாங்கிக் கொண்டு போவதெல்லாம் முடியாத காரியம். அந்த பக்கம் திருவாரூர் போலாமா? இல்லை சுவாமிமலையில் இருக்குமா?
சடாரென்று 10 கறவை மாடுகள் அருகில் வந்து நின்று, மகனே உனக்கு தேவையான பாக்கெட் பால் இருக்கிறது என் மடியில் இருக்கிறது எடுத்துக் கொள் என்று சொல்வது போன்ற ஒரு அசிரீரி கேட்டது. திடுக்கிட்டு முழித்துப் பார்த்தேன். அப்படியெதுவும் இல்லை. இப்போது நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகயிருந்தது.
ராமராஜன், பால் விற்பவர்கள், பால் கறப்பவர்கள், பால் வீடு வீடாக டெலிவரி செய்பவர்கள் மீதெல்லாம் மனதில் அதீத பாசமும் மரியாதையும் வந்து போனது. மிகவும் கஷ்டமான வேலை இதுவாகத்தான் இருக்கும் என்றெல்லாம் யோசனை வந்தது. நினைத்து பாருங்கள் காலை ஐந்து ஐந்தரைக்கெல்லாம் வீட்டு வாசலில் எப்படி பால் வருகிறது. இவர்கள் இல்லையென்றால் அதிகாலையில் காஃப்பி குடிப்பதே கனவாகி போய்விடும் என்றெல்லாம் மனம் பிதற்ற ஆரம்பித்தது. (பிற்பாடு தூக்கமில்லாமல் இருந்தால் இப்படித்தான் கண்டதை யோசிக்கத் தோன்றும் என்று பாட்டி சொன்னது புரிந்தது)
4:15 ஆன போது அடுத்த வண்டியும் வந்தது. மீண்டும் அதே காட்சிகள். எடுப்பதும், அடுக்குவதுமாக ராமலிங்கம். ஒரு நோட்டில் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார் பெரியவர். அவர் கணக்கு போடும்போது கடையை நோட்டமிட்டேன். சுவற்றில் தேதி காலண்டர், மாத காலண்டர் ஒரு மூலையில் இருந்தது. அதனருகே வெங்கடாஜலபதி ஃபோட்டோ இருந்தது. இரண்டு சின்ன விளக்கும் இருந்தது. அதன் கீழே விநாயகர் சிலை ஒன்றும் இருந்தது. ஒரு ஃபேன் இருந்தது. எம்.ஜி.ஆருடன் பெரியவர் சின்ன வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது.
கணக்கு போட்டு முடித்த பெரியவர், “தம்பி உன் நல்லநேரம், 20லிட்டர் பால் எக்ஸ்ட்ரா இருக்கு, கொண்டா அடுத்த பைய” என்றார். மீதியை ராமலிங்கம் அடுக்கி வைக்க நான் ரூ175 எடுத்துக் கொடுத்தேன்.
“இந்த பை தாங்காது. நான் சாக்கு பை தர்றேன். அதுல கொண்டு போ. அடுத்த நட இந்த பக்கம் வந்தேனா ஞாபகமா இந்த கோணி பைய கொண்டு வந்து கொடுக்கிறியா?”
நான் வேகமாக தலையாட்டினேன்.
“நடந்தா வந்தீங்க?”
“ஆமாங்க”
“சரிய்ய்ய்.. தூக்கிட்டு நடக்கமுடியாது. ரிக்ஷா புடிச்சிட்டு போயிடுப்பா” என்றார்.
“சரிங்க. ரொம்ப சந்தோஷம்.”
சண்முகத்தை எழுப்பினேன். மணி 4:40 ஆகியிருந்தது. ரிக்ஷா புடிச்சு, பஸ்ஸடாண்ட் வந்து பஸ் புடிக்க 4:55 ஆனது. அடுத்த அரை மணியில் குடவாசல் வந்து சேர்ந்தோம். வீடு போய் சேர 5:40 ஆனது.
சித்தப்பாவிற்கு ரொம்ப சந்தோஷம். “வாடா வாடா. நாலு மணிக்கெல்லாம் வந்துடுவேனு நெனச்சேன். ஆறாக போகுதுனவுடனே கொஞ்சம் பய்ந்துட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டீயோ?” என்றுக் கேட்டார்.
சண்முகம், “அதெல்லாம் ஒன்னுமில்ல அத்தான். நம்ம வீட்டுக்குத்தானே செய்றோம். ஒரு சிரமமும் இல்ல. போனோம் பால வாங்கினோம். வந்திட்டோம். ஒன்னும் இல்ல.” என்றான். நான் பட்ட கஷ்டம் அவனுக்கு எங்க தெரியப்போகுது?
சித்தப்பா, “சரி சரி 8:30க்கு நல்ல நேரம், அதுக்குள்ள ஒரு தூக்கத்தப் போட்டு எழுந்திரிங்கடா. பாவம்.. கண்ணப் பாரு எப்படி செவந்து கெடக்கு” என்றார்.
அப்படியே படுத்தவன் எட்டு மணிக்கு சூடான காஃப்பி மணத்துடன், ””அத்தான்.. அத்தான்” என்று என்னை எழுப்பினாள் அத்தை மகள்.

Sunday, March 15, 2015
நான் அவளை விவாகரத்து செய்கிறேன்..
எனக்கு அப்போது வயது 11 அல்லது 12 ஆக இருக்கும். வருடம் 85 அல்லது 86 ஆக
இருக்கும். எங்கள் வீடு தஞ்சாவூரின் மத்திய பகுதியிலிருந்து தென்மேற்கில்
தஞ்சை மருத்தவக்கல்லூரிக்கு அருகே இருக்கிறது. அதிவேகமாக வளர்ந்து வரும்
பகுதியாக அப்போதைக்கு இருந்தது. எங்களது குடியிருப்பில் வருவாய் துறை
அதிகாரிகளே அதிகமாக இருந்தனர். அதிகாரிகள் பலர் சேர்ந்து கூட்டாக
வாங்கினர். மிகக் குறைவான வீடுகளே அக்கம் பக்கத்தில் இருந்தது. இன்று அந்த
வளர்ச்சி முற்றுபெற்றுவிட்டது என்று எண்ணுகிறேன். எங்கள் வீட்டிலிருந்து
வடக்காக போனால் தமிழகத்தின் மிகப் பிரபலமான லெக்ஷ்மி சீவல் ஃபேக்ட்ரி
இருக்கிறது. வெற்றிலை தாம்பூலத்திற்கு பெயர் போன லெக்ஷ்மி சீவல்! தெற்கே
போனால் கூட்டுறவு வங்கி காலனி இருக்கிறது. எங்களது வீட்டிற்கு நேர் எதிரே
அரசு (அரிசி மற்றும் பாமாயில்) பாதுகாப்பு கிடங்கு ஒன்று கொஞ்சம் உள்ளடங்கி
அப்போதுதான் கட்டிக் கொண்டு இருந்தனர். பிரதான சாலைக்கும் அரசு
கிடங்கிற்க்கும் இடையில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடியானவர்கள் பலர்
குடிசைக் கட்டி வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களது பிரதான வேலையே கட்டிடம்
மற்றும் கேணி கட்டுமான பணி. சிலரது வீட்டுப் பெண்மணிகள் வீட்டு வேலைக்கும்
சென்றனர். சிலர் ரிக்ஷாவும் ஓட்டினர். சிலர் பின்னாளில் அந்த அரசு
கிடங்கில் மூட்டை தூக்கும் வேலையும் செய்தனர்.
வீட்டிற்கு அருகே குமரன் தியேட்டர் இருக்கிறது. குமரன் தியேட்டர் ஒரு மாடர்ன் outlier. மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்கள் அங்கேத்தான் திரையிடப்படும். எனக்கு அந்த குடியானவர்களின் சராசரி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவ்வப்போது அவர்களின் கலாச்சாரம் என்னில் காணலாம். குறிப்பாக இரவு இரண்டாம் காட்சி பார்ப்பது அவர்களது கலாச்சாரம். நானும் 10 மணிக்கு மேல் திரைப்படம் அவ்வப்போது கண்டது உண்டு! திங்கள் முதல் சனி வரை அயராது உழைப்பார்கள். சனிக்கிழமை குமரனில் இரவுக் காட்சி களைக் கட்டும். குறிப்பாக எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்றால் கூட்டத்திற்கு அளவே இல்லை. வார நாட்களில் இரவு இரண்டாம் காட்சி இந்த குடியானவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பழகுவதற்கு இனிமையானவர்கள். நான் பல முறை அவர்களது இல்லங்களுக்கு போயிருக்கிறேன். அன்போடு இருப்பதை உபசரிப்பார்கள்.
மழை பொழியும் ஐப்பசி மாதங்களில் இவர்களது கட்டுமான பணிகள் பாதிக்கும். அப்போது இவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் மைதானத்தில் பளிங்கு, பம்பரம், சூது விளையாடுவார்கள். குறிப்பாக காற்று வீசும் நாட்களில் பட்டம் விடுவார்கள். மாஞ்சா தடவி, பட்டம் விடுவதில் அவர்கள் அனைவருக்கும் ஒரு ஈடுபாடு உண்டு. கபடி விளையாடுவதிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு அவர்களுக்கு. சிலம்பம் சுழட்டுவதிலும் கைத் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
அந்த அரசு கிடங்கின் வாயிலில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. அந்த கடையிலிருந்துதான் இவர்கள் பெரும்பாலும் காலை உணவை வாங்குவார்கள். சொம்பு தளும்ப தேநீர் (டீ). 25 காசுகளுக்கு ஒரு பன் கிடைக்கும். ஒருவருக்கு ஒரு பன்.. ஒரு கிளாஸ் டீ. இதுதான் அவர்களது காலை உணவு. மதிய உணவாக பழைய சோறே. இரவு மட்டுமே சமைப்பார்கள். எஙகள் வீட்டு திண்ணையிலிருந்து இவர்கள் இரவு சமைக்கும் உணவிலிருந்து வரும் நறுமணம் அருமையாக இருக்கும். பின்னாளில் இவர்கள் இருந்த பொறம்போக்கு நிலத்தை பட்டா போட்டு கொடுத்ததில் எனது அப்பாவின் பங்கு அதிகம். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஒரு முறை தஞ்சை வந்த போது அவர்களுக்காக பேசி பட்டா வாங்கிக் கொடுப்பதில் எனது தந்தையின் பங்கும் உண்டு. அதனால் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.
என்னதான் அந்த குடியானவர்கள் நல்லவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஒரு குறை இருந்தது. அவர்களது குடும்பத் தலைவர்கள் பெரும்வாரியானவர்கள் குடிக்கு அடிமையாக இருந்தனர். இன்று எனக்கு கெட்ட வார்த்தைகள் தெரிவதே அவ்ர்கள் மூலம்தான். குடித்துவிட்டு பிரதான சாலையில் உரக்க அனைத்து கெட்ட வார்ததைகளையும் உபயோகிப்பார்கள். என் அம்மாவிடம் அதன் அர்த்தம் நான் கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. பிறகு நானாகவே புரிந்து கொண்டேன். என் அப்பாவோ மற்ற வருவாய் துறை அதிகாரிகளோ பிரதான சாலையில் சென்றால் அமைதியாக இருப்பார்கள்.
இவர்களுக்கெல்லாம் ஒரு தலையாரி ஒருவர் இருக்கிறார். அவருக்கு இவர்கள் எல்லோரும் கட்டுப்பட்டவர்கள். என்ன பிரச்னை என்றாலும் அவரிடம்தான் முதலில் செல்லும். அவர் எடுக்கும் முடிவு இறுதியானது. அவரும் பெரும்பாலும் பாராபட்சமின்றி இருந்தவர்.
ஒரு நாள் கடைக்குச் சென்று கொண்டிருந்தவனை தலையாரி கூப்பிட்டார். ‘தம்பி அய்யப்பு, இங்க வாப்பா’ என்றார். எனக்கு கொஞ்சம் உதறல்தான். எதுக்காக என்னைக் கூப்பிடுகிறார் என்ற எண்ண ஓட்டமே ஒடியது. ‘ரெண்டு நிமிஷம் கொடுத்தீங்கனா, வீட்டுக்கு தேவையானத வாங்கிக் கொடுத்திட்டு, வீட்ல சொல்லிட்டு வர்றேனே. இல்ல அவசரமா’ என்றேன். அவர், ‘இல்ல தம்பி, நீ உன் வூட்டு ஜோலிய முடிச்சிட்டே வா’ என்றார். அம்மா சொன்ன வேலைகளை முடித்துவிட்டு போகும் வரை, ‘என்னவாக இருக்கும்’ என்ற எண்ணோட்டமே மேலோங்கியது.
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தலையாரி வீட்டு வாசலுக்குச் சென்றேன். ‘வாப்பா அய்யப்பு. இப்படி உக்காரு’ என்றார். அங்கே ஒரு கணவனும் மனைவியும் உட்கார்ந்திருந்தனர். மனைவியின் மடியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றும் இருந்தது. தலையாரி என்னிடம், ‘தம்பி, ஒரு மனு எழுதணும். நல்லா தெளிவா எழுதணும். நீ நல்லா எழுதுவேனு எனக்கு நம்பிக்கையிருக்கு. எழுதி தருகிறாயா’ என்றார். எனக்கு என்னமோ ஏதோ என்று பதறியவனுக்கு அது சற்று எளிதான வேலையாகத் தோன்றியது. ‘அதுக்கென்ன.. எழுதிட்டா போச்சு அய்யா’ என்றேன்.
கணவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்றான். அதற்கு தலையாரி காரணம் கேட்டார். அவன் சொன்னதின் சாராம்சம் இதுதான். ‘என்னை மதிக்கிறதே இல்லை. எனக்கு நல்லதா சமைச்சு போடுறதே இல்லை. எனக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க மாட்டேங்கிறா. எப்ப பார்த்தாலும் பூண்டில இருக்கிற அவங்க அம்மா வூட்டுக்கு போறா. எனக்கு அவள புடிக்கல. அவள நான் விவாகரத்து செய்றேன். தலையாரி நீங்கத்தான் எனக்கு இத முடிச்சு கொடுக்கணும்’ என்றார். அந்த கணவன் சொல்லும் எலலாவற்றுக்கும் அந்த மனைவி சிரித்து கொண்டிருந்தாள் . எனக்கு அன்று புரியவில்லை. தலையாரி என்னிடம் என்ன எழுதவேண்டும் என்று சொன்னார். அழகாகத் தெளிவாக எழுதிக் கொடுத்தேன். கைநாட்டு இட்டார்கள் இருவரும். மனைவி சிரித்துக் கொண்டே அனைத்தையும் செய்தாள்.
வீட்டுக்கு வந்ததும் அனைத்தையும் அம்மாவிடம் சொன்னேன். முடிவில் ’விவாகரத்து என்றால் என்ன அம்மா?’ என்று கேட்டேன். அம்மா எனக்கு புரிய வைத்தாள். எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. இதற்கா நான் துணைப் புரிந்தேன்? முடியாது என்று சொல்லியிருந்தால் அவர்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்றே எண்ணினேன். என்னை நானே நொந்தேன்.
அடுத்த நாள் வாரயிறுதி. குடும்பத்துடன் நாங்கள் ஏதோ ஒரு திரைப்படத்துக்குச் சென்றோம். அங்கே நான் கண்ட காட்சி.. திரையில் அல்ல.. நிஜத்தில்.. என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே கணவனும் மனைவியும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தனர். எனக்கு பல வருடங்களுக்குப் புரியவில்லை. விவாகரத்து கேட்டவர்கள் பிரிந்து இருக்கவேண்டும் அல்லவா? எப்படி பிரியாமல் இருக்கின்றனர்? அதற்கு பிறகு அவர்களுக்கு இன்னொரு குழந்தையும் பிறந்தது. அவர்கள் பிரியவில்லை. பல வருடங்களுக்கு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.
வருடங்கள் ஓடியது. இப்போது கல்லூரிக்குப் போய் கொண்டிருந்தேன். ஒரு நாள் தலையாரி என்னைக் கூப்பிட்டார். ’தம்பி இங்க வாப்பா’ என்றார். அதே கணவனும் மனைவியும். அதே நாடகம். இப்போது எனக்கு புரிந்தது. நம்பர் கடையில் தலையாரியும், கணவனும் சாராயம் குடித்திருந்தனர். இருவரும் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது இருந்தனர். ஏழை, படிப்பறிவு இல்லை என்றாலும் அந்த மனைவியின் உறுதி என்னை இன்று வரை வியப்பில் ஆழ்த்துகிறது. நண்பர்கள் சிலர் நேற்று காரடையான் நோன்பு கொண்டாடுகிறார்கள். இந்த குடியானவர்கள் அதனை கொண்டாடி நான் பார்த்தது இல்லை. இருப்பினும், அவள் தெளிவாக இருக்கிறாள். அவள் மீது எனக்கு மரியாதை அப்போது வந்தது. இன்று பல மடங்காக கூடியிருக்கிறது.

India's Daughter - my thoughts Part 2
When slum dog millionaire was released several of my friends hated
it. I too hated it but on a different angle. Here's the reason! If two
scripts were presented to Danny Boyle, one being the original slum dog
millionaire script and the other being story of Viswanathan Anand, which
one would he pick? Obviously the former. As a movie, slum dog
millionaire was well made and deserved appreciation! Yes I digress here
from others who still hate that movie. A particular scene in slum dog
millionaire really pin points our culture, how we suck the balls of cine
actors and actresses. A boy going loo (poopoo) in a slum comes to know
that Bachaan (India's superstar) is somewhere near. Eager to see him and
to take autograph, he doesn't waste time.. jumps into shit and goes
straight to take autograph. Danny Boyle clearly showed our flaws in our
culture. Still now Indians are divided about this movie. Movie went on
to show how kids are tortured and made to beg on the street. At the same
time, south Indian director Bala directed a movie, "Naan Kadavul (I am
God)." The movie had similar theme about helpless kids. No one objected
or talked about it. That clearly showed that we can't take criticism
from outside the country.
I agree (to an extent.. not everyone) most of the western media/world/people still think of us, as a snake charmer. As if we all raise a snake in our closet, worship and we play the magudi (an instrument played in front of snakes) everyday morning without fail. Sigh! Speaking of snakes, whenever I go to disneyland I avoid going into "It's a small world after all" ride. It's a ride sitting on a small boat. On the way you can hear the song of "It's a small world after all" repeatedly. The boat takes us to depictions of several country. For India, you can see a snake charmer :( Yes the eyes of western media/people are different. A skewed one if I may say.
Not long ago, NYT posted a sarcastic cartoon (after India successfully sent Mangalyaan to Mars) lambasting the NASA/European world. But the picture also had a farmer and a cow in it. It was not pleasing to many eyes. Indians took objections. I can understand the sentiment.
However, recent documentary "India's daughter" directed by Leslee Udwin doesn't fall into that category at all. Not even close!

- First,
it didn't have any high decibel morons like Arnob and jokers as a panel
in it. If Indians really want to object that's something un-Indian, it
has to be talk shows like Arnob's.
- Second, documentary
had view from victim's parents, victim's friend, Mukesh Singh, Delhi
police commissioner, former Delhi CM Sheila Dikshit, Justice Leila Seth,
and Oxford academic Maria Misra. Does it have any view of non-Indian?
It is only the voice of the Indians? What is there to object? If it had
voice of Brits and no Indians I can agree. What is un-Indian in this
document really? Honestly if you can't understand this, it is evident
that you are hiding behind an agenda.
- In my Part - 1 I
have clearly stated that I was shocked at Mukesh and his lawyers'
downtrodden thinking. Is that what bothers my fellow Indians? If yes,
please tell me honestly if you agree with what they said. If yes, then I
see why you vehemently oppose and want to be ban the documentary. If
not, don't you think it needs to be discussed in public? Don't you
realize your mistake? Will you pass on this negligence to your kids?
Really?
- Lot of my friends ask this.. oh.. there are many
victims.. why only Nirbhaya? My answer to them.. you are not seeing the
big picture. It is not just about Nirbhaya. Only a spark is needed.
This has to ignite and change things. If not, we are currently seeing a
rape every 20 minutes. This will increase :( You really want to see a
rape a minute?
- Overall the documentary discusses the
issue completely and ends with a good question.. "will Jyoti's sacrifice
stop future rapes?" On a plantain leaf, a dheepam and few other things
floating on a river. A fitting Indian end to the documentary. Do you
need any more Indianess to the documentary?
- A common
objection I see from people.. oh.. those crimes don't happen elsewhere?
Can they speak about the crime in Australia, Antarctica, Saudi Arabia,
Africa, Europe etc. My answer to them.. yes it happens all over the
world not just India.. but in none of the places people responded like
they did for Nirbhaya. It is quite unseen. If that happens elsewhere you
can see all the media outlets jumping on it. Again I repeat it.. all
media jumping on it. Why didn't "all media" jump in Delhi but only
Leslie Udwin? Because they know India would object :) Understand this my
fellow Indians, you are sensitive for something that we should condemn.
It doesn't matter who brings the issue. Don't shoot the messenger!
- Another
common assault.. these people allowed a white lady to enter into prison
and take the documentary. How can they allow? Aren't you ashamed and
silly saying that? How is it her fault? Isn't that your fellow Indians
fault? Why take out on her being white? Really? You racist punk. Stop
this menace.
- The rapist's lawyer says there are 250
sitting MPs who have a pending criminal record (rape or robbery or
murder). If you are really taking objection against this documentary,
did you hear what that lawyer said? It doesn't bother you? But this
documentary bother you? Really?
- In the documentary police chief claimed that Delhi is safe as any other developed/developing nation's capital. Do you agree with that? Is that Leslie's statement? Isn't that our own police chief's statement? You don't want to object but object the documentary that brought this to us? Really?
"India's Daughter" - my thoughts!
Starting from 'Neel Akasher Neechey (1959)' to 'India's Daughter(2015)' India has always found reasons (or made up reasons) to ban movies/documentaries. We have a censor board (formed in 1952) to decide what is right and wrong for us! IMHO, it is a wayward solution. It is easy to influence a panel! About the panel and its shoddy operation is a story for another day!
'Indiana Jones and the temple of the doom' was banned initially by the censor board. Later the ban was lifted. And till today I have no idea why it was banned and more than that why it was lifted?! What really changed in between? Thinking of why it was banned gave me part of the answer why 'India's Daughter' was banned. India is not tolerant for criticisms from outside. Period! Remember why several Indians hated slum dog millionaire? Indians will appreciate only when their culture is being praised. A Washington-Post article praising Hindu mythology is welcome. But if that's questioned, we take complete offense to it! Especially it comes from the media of a country which has colonized us, it is going to be double whammy! :)
No society can improve/progress without criticism. I have seen the documentary two times already. Personally, I see no objection. Yes it is painful to see what Mukesh Singh and the lawyers defending the rapists has to say. It is not their sobbing story but shows their retrogressive mindset. It is also the voice of the few Indians who are roaming freely amidst us. After all they are our people. It is our voice. It has to be heard to understand how silly it is. Let us be honest and introspect our culture. If not now, when are we gonna discuss it? Give a chance for the people to see the documentary and let it be the seed sown for the future.
Not very long ago, what Mukesh Singh said now, were the thoughts of our parents/grand parents. Let's not pretend that it ain't so. How long are we going to pretend that our culture is perfect and shields from all that's happening around us? Jyoti Singh gave her precious life to change this. It has to mean something. Every struggle she went through that night has to be paid for. It is time we all start to respect women.
Ok let's assume the documentary ban is lifted. What could happen? Is "all is well?" No. My understanding is, whatever riots are gonna happen would be a staged one. Not for the reason that the documentary came from BBC.. not for the reason that it gloats Mukesh Singh retrogressive thinking.. not for the reason that it devalues our Indian culture.. but the real reason would be that the lawyer for the rapist asked a very valid question. "If India wants to send a social message, they should start from their own neck. There are 250+ MPs who have pending criminal case that involves rape, murder, robbery." It is for that reason, it would be a staged one.
At end of the documentary victim's father asked, "My daughter has lit a candle asking how we are gonna solve these crimes and stop it forever?" How is India going to answer? Not just for her! For every twenty minutes, we have a new victim... for them :( It is a tough task ahead. It is even more tougher if we are hiding under false pretense.
Friday, March 13, 2015
லெக்ஷ்மியும் கன்னுக்குட்டியும்
பள்ளிக்கு போனக் காலத்துல கடைசி பரீட்சை எழுதி முடிச்சு வெளிய வந்ததும்
வெள்ளை சட்டை பூரா இங்க்கா இருக்கும்! நம்ம கூட்டாளிங்க ரெண்டு பேனா
வெச்சிருப்பானுங்க. ஒன்னுல பரிட்சை எழுத. இன்னொன்னுல இங்க்கும் வாழைத்
தண்டு சாரும் கலந்து வெச்சிருப்பானுங்க. அந்த பேனாவால சட்டையில் இங்க்
அடிச்சா, நம்ம சட்டை என்ன தொவச்சாலும் கறை போகவே போகாது. பரீட்சை
முடிந்ததும் பள்ளியை விட்டு வெளியே வந்ததும் தொடங்கும் இந்த இங்க்
போராட்டம். சிலருக்கு சட்டையில் மட்டும்தான் இங்க். என்னைப் போன்ற
மாவீரனுக்கு முகமெல்லாம் இங்க். ஒரு வ்ழியாக போர் முடித்துவிட்டு
வீட்டுக்கு வந்ததும் வீட்ல டின்னு காட்டுவாங்க அம்மா! அப்படியே நாலு
துணிமணிய ஒரு பையில அடைச்சு வெச்சு கிராமத்துல இருக்குற ஒரு வெட்டி பய
இதுக்குனே இருக்கான், அவன் கூட பாட்டி வீட்டுக்கு அனுப்பி வெச்சிருவாங்க.
அந்த வெட்டி பயக்கிட்ட காசக் கொடுத்துருவாங்க. நம்ம கையில கொடுத்த நாம
தொலச்சிருவோமாம். அவன் பிசுனாரி பய, அம்மாகிட்ட எனக்கு ஃபுல்
டிக்கெட்டுக்கு காசு கரெக்டா வாங்கிட்டு பஸ்ல போகும்போது அரை டிக்கெட்
எடுத்துருவான். என்ன வேற நிமிர்ந்து உக்காராதனு அதட்டுவான். நிமிர்ந்தா
உயரம் தெரிஞ்சிரும்ல. அப்படி மிச்சம் புடிச்ச காசுல அன்னிக்கு சாயங்காலமே
நம்பர் கடையில தண்ணிய போட்டு பாட்டி வூட்டுக்கு வந்து ’உங்க மருமக ஒன்னும்
சரியில்ல ஆச்சி.. மரியாதையே தெரியல அவங்களுக்கு. காஃப்பி தண்ணி கூட
கொடுக்கல.’ நான் மனசுக்குள்ள் , “நாதாரிப் பய.. அம்மா வெச்ச வெண்பொங்கல
முழுசா துண்ணுட்டு வாய் கிழிய பேசுது பாரு பக்கி பண்ணாடை” திட்டிக்குவேன்.
என் பாட்டியும் `அவ எப்பவுமே இப்படித்தான். பெரியவங்களையே மதிக்கிறது இல்ல.
இதுல உன்ன மதிச்சிட போறாளாக்கும். இந்தா இந்த ரெண்டு ரூவாய வெச்சுக்க. வேற
என்ன சங்கதி?’ பிசுனாரி பய இந்த ரெண்டு ரூவாவுக்கு எங்க அம்மாவ பொரணி
பேசுது. இவன என்ன பண்ணலாம்.. வுடுங்க அப்புறம் ஒருநாள் அவன் கோவணத்துகுத்
தீ வெச்ச கதை சொல்றேன்.
பாட்டி வூட்ல பாட்டியும் சித்தப்பாவும் மட்டும்தான். கிராமத்துக்குள்ள நுழைஞ்சதும், பாட்டி வீடுதான் மொத வீடு. பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துலயே வீடு. பாட்டி வீடு சுத்தியும் மரங்கள். எந்த கோடைக்கு போனாலும் பாட்டி வீடு சிலு சிலுனு இருக்கும். வெளிய சுட்டெரிக்கும் வெயில். வீட்டுக்குள்ள ஃபேனே தேவையில்ல. நைட்டு நல்லா குளிரும். பெரிய திண்ணை. திண்ணைல பெரிய மேஜை, நாற்காலி, பேடு, மூணு கலர் பேனா, பேப்பர் வெயிட்டு, கத்தையா பேப்பரு எல்லாம் இருக்கும். தாத்தா அந்த காலத்துல ஊருக்கு கணக்குபுள்ள. தாத்தா இருந்த வரைக்கும் காலைல ஊர் ஜனங்க யாராவது வந்து தாத்தவ மனு எழுதிக் கொடுக்க சொல்லுவாங்க. அவரும் பொறுமையா எழுதிக் கொடுப்பாரு. பாட்டிக்கு நல்ல காது. திண்ணைல சொல்றத அடுப்படில உக்காந்து கேப்பா. ‘அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’னு லைவ் micro blogging லெவலுக்கு comment கொடுப்பா. தாத்தா போய் சேர்ந்தப்புறம் சித்தப்பா இந்த வேலைய செஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்படியே வய வாய்க்கா தோப்புனு பொழுத ஓட்டிக்கிட்டு இளந்தாரியா சுத்திக்கிட்டு இருக்காரு சித்தப்பா!
பாட்டி அருமையாக சமைப்பாள். அதைவிட பிரமாதமாக காஃப்பி போடுவாள். பாட்டி வீட்டில் மாடு இருப்பதால் எந்த நேரம் காஃப்பி கேட்டாலும் கிடைக்கும். பாட்டி வீடு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அதுக்கு காரணம், வீட்டுக்கு பின்னாடி பெரிய கொல்லப்பக்கம். அதுக்கும் பின்னாடி ஒரு அழகான குளமிருக்கு. கொல்லைப்புறத்தின் முடிவில் ஒரு பூவரசம் மரமிருக்கு. அதன் கிளைகள் எறுவதற்கு லகுவாக இருக்கும். அருகில் குளம் என்பதால் அந்த மரம் குளத்தின் மீது தவழ்ந்து படர்ந்திருக்கும். அதோட கிளையிலிருந்து குளத்துள்ள குதிக்கலாம். கொல்லைப்புறத்தின் நடுவே பெரிய மாட்டுத் தொழுவம். தொழுவத்தின் பின்பக்கம் வைக்கோல் போர் இருக்கும். கறவைக்கு ரெண்டு மாடு. வயலுக்கு ரெண்டு மாடு. நாலு ஆடு, ஆட்டுக்குட்டிங்க். அஞ்சாறு கோழி, ஒரு சேவ, ஒரு நாய், பத்தாதுக்கு ஒரு பூனை இருக்கு. இது போதாதா ஒருத்தனுக்கு? எனக்கு இந்த வாயில்லா பிராணிகள் எல்லாத்துக்கிட்டயும் பாட்டி மாதிரியே பேசுவேன். அதுல குறிப்பா லக்ஷ்மினு ஒரு மாடு. அத சின்ன கன்னுக்குட்டிலேர்ந்து வளர்க்கிறா பாட்டி. அதுக்கு நானுனா ரொம்ப பிரியம். பாட்டி லக்ஷ்மிகிட்ட ’அய்யப்பன எழுப்பு’னு சொல்லிவிடுவா. கொல்லப் பக்கதிலேர்ந்து முன்னாடி வந்து என்ன கண்ணத்துல நக்கி எழுப்பும். லக்ஷ்மி ரொம்ப அழகா இருப்பா. செந்நிறமா இருக்கும் அவ உடம்பு. ஆனா முகத்துல அழகா கருப்பும் வெள்ளையும் பாக்க லட்சனமா இருப்பா. அவ எங்க இருந்தாலும் லெக்ஷ்மினு கூப்பிட்டா போதும் திரும்பி பார்ப்பா. எனக்கு அவக்கிட்ட பிடிச்சதே அந்த சொர சொர நாக்க வெச்சுக்கிட்டு நெத்தில நக்குவா. கூசும்.. இருந்தாலும் சொகமாயிருக்கும். அப்படி செஞ்சா தலமுடி நல்லா வளரும் எவனோ சொல்ல அவகிட்ட டெய்லி தலய காமிக்கிறது வழக்கமாகி போச்சு. பாட்டி எனக்கு கொடுத்த ஒரே வேலை, கடைக்கு போய் ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போயி வீட்டுக்கு தேவையானதும் புண்ணாக்கும் வாங்கிட்டு வர சொல்லுவா. முக்கியமான ஒன்ன சொல்ல மறந்துட்டேன். லெக்ஷ்மி என்னையும் பாட்டியையும் மட்டும்தான் கிட்ட விடுவா. சித்தப்பா கிட்டப் போன மிரளுவா. மத்தவங்கள முட்டுவா. கழனித் தொட்டில புண்ணாக்கப் போட்டு கிளறிவிட்டுக்கிட்டே தண்ணி காட்டணும். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலையது. ஒவ்வொரு மாடா காட்டணும். லெக்ஷ்மிக்கு மட்டும் ஸ்பெஷல். நான் கொஞ்சம் தனியா எடுத்து வெச்சிருப்பேன். அவளுக்கு என் கையால கொடுப்பேன். திண்ணுட்டு கைய நல்லா நக்குவா. இன்னும் வேணும்னு தலையையும் காலையும் உதைச்சு கேப்பா. இப்ப நெனச்சாலும் மனசுக்கு நிறைவாயிருக்கு.
எட்டாவது முடிச்சு கோடைக்குப் பாட்டி வீட்டுக்கு போனப்ப பாட்டி வூட்ல லெக்ஷ்மி மட்டும்தான் இருந்தா. இன்னொரு கறவை மாடு இல்ல. பாட்டிய கேட்டேன். `கொஞ்சம் பண தேவைப் பட்டுச்சு. வித்துட்டோம்டா பேராண்டி’னா. ’நீ பக்கத்து வீட்டுக்கு போயி பால் வாங்கிட்டு வா. காஃப்பி போடுத் தர்றேன்’னு சொன்னா. எப்பவும் பால் வித்துத்தான் பாட்டிக்கு பழக்கம். இந்த தடவ பால் வாங்கிட்டு வானு சொன்னது எனக்கு வித்தியாசமா இருந்திச்சு. இந்த தடவ லெக்ஷ்மி வளர்ந்து பெருசா தெரிஞ்சா. ’ஏன் பாட்டி, லெக்ஷ்மி பால தரமாட்டாளா”னு கேட்டேன். `அவ இப்பத்தான் மொத மொத செனையா இருக்கா. நீ வந்துட்டேல. அழகான கன்னுக்குட்டி ஒன்னு தருவா. அப்புறம் அவளே பால் தருவா’னு சொன்னா. எனக்கு கொஞ்சம் புரிஞ்சது மாதிரி தெரிஞ்சாலும், புரியாததுதான் அதிகம். லெக்ஷ்மிய பாக்க பாவாமியிருந்துச்சு. செல்லமா தடவிக் கொடுத்தேன். அவ வழக்கம் போல தலைய நக்கிவிட்டு பாசமா இருந்தா. நான் வந்ததுக்குப்புறம் லெக்ஷ்மி ரொம்ப சந்தோஷமாயிருக்கானு பாட்டி சொல்லிக்கிட்டே இருந்தா.
பாட்டி வீட்டு பெட்ரூம்லேர்ந்து பார்த்தா கொல்லபக்கம் நல்லா தெரியும். லெக்ஷ்மிய ஜன்னல் பக்கத்துலயே கட்டிப் போட்டு எப்ப கன்னு போடுவானு பாக்குறது வழக்கமா போச்சு. பாட்டி, ‘டேய்ய் அவளை பாத்துக்கிட்டே இருக்காதே. கண்ணு பட்ரும். நீ போயி வெளையாடு. நான் கன்னு போட்டதும் சொல்றேன்’ சொல்லிக்கிட்டே இருந்தா. இரண்டு வாரமாச்சு. சித்தாப்பாகிட்ட, பாட்டிக்கிட்ட, வேலைக்கு வர்றவங்க கிட்டனு எல்லாரையும் நச்சரிச்சுக்கிட்டே இருந்தேன். அவகிட்டயே கேட்டேன். அவளுக்கு சொல்லத் தெரியல.
ஒரு நாள் மதியான நேரம் நல்லா உச்சி வெயிலு பொளந்து கட்டுது. அப்பப் பாத்து லெக்ஷ்மி கத்த ஆரம்பிச்சுட்டா. தூங்கிட்டு இருந்த பாட்டிய எழுப்பி, ‘பாட்டி, லெக்ஷ்மி கன்னு போட போறானு நெனக்கிறேன். வா வந்து பாரு. பயமாயிருக்கு’னு சொன்னேன். சித்தப்பா வேற இல்ல. பாட்டி வந்து பாத்துட்டு, ‘நீ போ உள்ள. இதெல்லாம் நீ பாக்கக் கூடாது’னு சொல்லிட்டா. இருந்தாலும் ஜன்னல் வழியா பாத்துக்கிட்டே இருக்கேன். லக்ஷ்மி உட்கார்றா, படுக்கிறா, எழுந்திருக்கிறா, கத்துறா.. இதையே திரும்ப திரும்ப பண்ணிக்கிட்டே இருக்கா. அதுக்குள்ள சித்தப்பா வந்து சேற எனக்கு தெம்பு வந்திருச்சு. அவர பாத்ததும் அம்ம்மானு கத்தினா லெக்ஷ்மி. அவளுக்கு தெரியும் போல யாரு உதவுவாங்கனு. சித்தப்பாவும், பாட்டியும், இன்னு ரெண்டு வேலையாளுங்களும் பத்திரமா கன்னுக்குட்டிய வெளிய எடுத்தாங்க. யாரோ ஒருத்தரு, ‘கடாவா கடேரியா’னு கேக்க.. ‘கடேரி’னு சித்தப்பா சொன்னாரு. அதெல்லாம் என்னான்னு அப்ப புரியல. கன்னுக்குட்டிய முச்சு விட வெக்க அது மூக்குக்குள்ள என்னமோ பண்ணினாங்க. அதுவும் மூச்சு விட ஆரம்பிச்சுச்சு. கன்னுக்குட்டிய லெக்ஷ்மிகிட்ட விட்டுட்டாங்க. குட்டி லெக்ஷ்மிய நக்கிக்கிட்டே செல்லமா ஏதோ சொல்லிக்கிட்டே இருக்கா லெக்ஷ்மி. குட்டி லெக்ஷ்மி மெல்ல எழுந்திரிச்சு அம்மாக்கிட்ட போய் பால் குடிக்க ஆரம்பிச்சுட்டா. பாட்டி சித்தப்பாவ பக்கத்துல விடுறா.. மத்தவங்கள பக்கத்துல ஒரு அடிக் கூட விடல. நான் பக்கத்துல போயி பாக்கலாம்னா பாட்டி விட மாட்டேனுட்டா. நான் அடம் புடிக்க, சித்தப்பா கிட்டக் கூட்டிக்கிட்டு போனாரு.
லக்ஷ்மி என்னை ஒன்னும் செய்யல. அவ தலைய தடவிக் கொடுத்தேன். நிமிர்ந்து பாத்தவ தலைய கீழ போட்டு குட்டிய நக்கிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. எனக்கு ஒரு பக்கம் குட்டிக் கன்னுக்குட்டிய பாத்த சந்தோஷம். ஆனா லக்ஷ்மி இப்படி மாறுவானு நெனக்கவே இல்ல. பாட்டிக் கிட்ட ’ஏன் பாட்டி இப்படி பண்றா’னு கேட்டேன். ‘அடேய்.. அவளுக்கு மொத புள்ளடா. அவள பாத்துட்டு பால ஊட்டிட்டு உன்ன பாப்பாளாக்கும்’னு சொன்னா. நாலு நாள் ஆச்சு. லக்ஷ்மி சந்தோஷமாத்தான் இருந்தா. ஆனா என்னவோ தெரியல முன்ன மாதிரி இல்லைனு எனக்கு தோணுச்சு.
நாலு நாளா யோசிச்சு யோசிச்சு படுத்தவனுக்கு அன்னிக்கு நல்லா தூங்கிட்டேன். காலைல யாரோ நக்குறது போல இருந்துச்சு. எழுந்திருச்சு பாக்குறேன்.. குட்டி லெட்சுமிய்ய்ய்ய். ரெண்டு நிமிஷம் பக்கத்துல இருந்து விளையாடினவ, துள்ளி குதிச்சு அம்மாகிட்ட போயிட்டா. சந்தோஷமா கொல்லபக்கம் போனா.. லக்ஷ்மி என்னைப் பாத்ததும் கால உதைச்சுக்கிட்டு தலைய வேகமா மேலும் கீழும் ஆட்டினா. சந்தோஷமா கூப்பிட்டா. குட்டி லெக்ஷ்மி பால் குடிச்சிக்கிட்டு இருந்த நேரம், என் தலைய வழக்கம் போல தன் சொர சொர நாககால தடவிக் கொடுத்தா. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.

Tuesday, July 29, 2014
ஒன்னும் ஒண்ணும் ரெண்டு
நளினிக்கு அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருகிறது. தோழிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடபுடால் விருந்து ஏற்பாடு ஏற்கனவே செய்துவிட்டாள். குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரண்டு பேரை நியமித்து விட்டாள். கேக் ஆர்டர் செய்துவிட்டாள். எல்லாம் முடிஞ்சுது, ஆனா “விருந்துக்கு என்ன புடவை கட்டலாம்” என்று யோசித்தாள். அவளுடைய அறையில் இருந்த புடவைகளை எல்லாவற்றையும் எடுத்து கீழே போட்டாள். எல்லா புடவைகளையும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவிட்டாள். கட்டுவதற்கு அவளிடம் புது புடவை இல்லை. புதுசுதான் வாங்கணும் என்று யோசித்தாள். அவளதுத் தோழி கவிதாவுக்கு மெசேஜ் அனுப்பினாள். ”லதாங்கி புடவை விற்பவள் தொலைப்பேசியும், முகவரியும் அனுப்பேன்” என்று கேட்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடத்தில், “ஏண்டி எத்தனை தடவ போனாலும் உனக்கு ஞாபகமே இருக்காதா.. இந்தா நீ கேட்ட அட்ரஸ் இங்க இருக்கு. நானும் வரட்டுமா, எனக்கும் புது புடவை எடுக்கணும்?” என்று கவிதா கேட்டிருந்தாள். மனதுக்குள் சிரித்துக் கொண்டே, கவிதாவுக்கு ஃபோன் செய்தாள்.
“நீயும் வர்றீயாடி.. ரொம்ப வசதியாப் போச்சு. இரு சுரேஷ்கிட்ட குழந்தைங்கள பாத்துக்க சொல்லிட்டு, நானும் ரெடியாறேன். என் வீட்ட தாண்டித்தானே போகணும், நீயே கார் எடுத்துக்கிட்டு வந்திடு. சேர்ந்தே போவோம்”
”நானும் கெளம்ப கொஞ்ச நேரமாகும். 30-35 நிமிஷத்துல வர்றேன்டி” என்றாள் கவிதா.
“என்னங்க.. நான் கவிதாவோட வெளியப் போறேன். அடுத்த வார பார்ட்டிக்கு புதுப் புடவ வாங்கப் போறேன். பையனுக்கு சாப்பாடு கொடுத்திட்டேன். அவன பாத்துக்கோங்க” என்றாள் நளினி.
“இல்ல என்னால முடியாது. எனக்கு ஆபிஸ்ல வேலையிருக்கு. நாளைக்கு ஒரு பிரசண்டேஷன் இருக்கு. நான் இன்னும் ரெண்டு நிமிஷத்துல கெளம்பறேன்” என்றான் சுரேஷ். கிடுகிடுவென லாப்டாப்பை மடக்கி பையில் வைத்தான்.
”ஞாயித்துக்கிழமை அதுவுமா என்னங்க ஆபிஸ்” என்ற அவளது கேள்வியைக் கூட காதில் வாங்காமல், டிரஸ் மாத்திக் கொண்டு நிமிஷமாய் புறப்பட்டான்.
நளினிக்கு பயங்கர கோபம் வந்தது. இருந்தாலும் வேலை என்றுச் சொன்னதால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதுவே கிரிக்கெட் விளையாடப் போறேன் என்று சொல்லியிருந்தால். பையனையும் சேர்த்து அனுப்பி இருப்பாள். சரி அவனையும் கூட்டிக் கொண்டு போவோம் என்று எண்ணிக் கொண்டே லதாங்கிக்கு ஃபோன் செய்து, வீட்டில் இருப்பாளா என்பதை உறுதி செய்துக் கொண்டு குளிக்கப் போனாள்.
லதாங்கி வீட்டை வேக வேகமாக சுத்தம் செய்தாள். அவளுடைய ஏழு வயது பெண் சுபத்ரா, “அம்மா எனக்கு ஒரு ஐபாட் வாங்கித் தர்றேன்னு சொன்னியே. இன்னிக்குப் போலாமா?”
“இப்ப முடியாது. வீட்டுக்குப் புடவை வாங்க ரெண்டு ஆண்ட்டி வர்றேனு ஃபோன் பண்ணியிருக்காங்க. அவங்க போனப்புறம் பாக்கலாம்” என்றாள்.
“கட்டாயம் வாங்கி தரணும்”
“சரி.. சரி”
வீட்டைச் சுத்தம் செய்து முடித்தாள். அவளிடம் இருந்த எல்லா புடவைகளையும் அழகாக அடுக்கி வைத்தாள். மசாலா டீ போட்டு முடித்த அதே வினாடி காலிங் பெல் அடித்தது.
”இதோ வர்றேன்” என்றபடியே கதவை திறந்து விட்டாள்.
கவிதாவும், நளினியும் உள்ளே வந்தனர்.
”வாங்க. டீ சாப்பிடுறீங்களா” என்றாள் லதாங்கி.
”இல்ல லதா. நாங்க வர்ற வழியில ஸ்டார்பக்ஸ்ல காஃப்பி குடிச்சிட்டுத்தான் வர்றோம். நீங்க குடிங்க”
“சரி உக்காருங்க. இதோ வர்றேன்.” உள்ளேப் போய் ஒரு டம்ப்ளரில் டீயை குடித்துவிட்டு வந்தாள்.
“சொல்லுங்க என்ன புடவை காட்டட்டும்?”
“ம்ம்ம் டிசைனர் புடவை காட்டுங்க மொதல்ல” என்றாள் நளினி.
“என்ன விஷேசத்துக்கு கட்டப் போறீங்க?”
:”அடுத்த வாரம் என் பர்த்டே. அதுக்குத்தான்! டேய் தம்பி, இங்கயே இரு எங்கயும் போகாதே. அம்மா பக்கத்துலயே இரு” என்றாள் பையனை நோக்கி.
லதாங்கி ஒவ்வொரு புடவையாகக் காண்பித்தாள். நளினிக்கும், கவிதாவுக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை.
"இதக் காட்டுங்க.. அந்த பிங்க்.. ம்ம்ஹூம்.. சரியில்ல.. அந்த கோல்டன் கலர்.. ம்ம்ஹூம்.. அந்த அரக்கு கலர்.. என் கலருக்கு சூட் ஆகாது.. இத ட்ரை பண்றேன்.. இது நல்லாயிருக்கா.. ” என்று கவிதாவும், நளினியும் மாறி மாறி ஒரு மணி நேரத்தை ஓட்டினர்.
“என்ன இன்னிக்கு நீங்க வாங்குற ஐடியா இல்லையா?!” என்று கேலியாகக் கேட்டாள் லதாங்கி.
நளினிக்குக் கோபம் வந்துவிட்டது. காட்டிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டே இன்னும் அரை மணி நேரம் இருவரும் பார்த்தனர். ஒரு கணத்தில் மூவருக்கும் அலுத்துவிட்டது. நளினி மட்டும் இரண்டு புடவைகள் நானூறு டாலர்கள் கொடுத்து எடுத்தாள். கவிதா அடுத்த முறை எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாள். லதாங்கி பொறுமையாக எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு, புடவையை ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள்.
காரில் பையனை உட்கார வைத்து, சீட் பெல்ட் போட்டுவிட்டு, தானும் உட்கார்ந்தது சீட்டு பெல்ட் போட்டதும், “என்ன கிண்டல் பார்த்தியா அவளுக்கு? ஒன்னும் ஒழுங்காவே இல்ல. ஆனா பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. வேற வழியில்லாம ரெண்டு எடுக்கவேண்டியதாப் போச்சு. ஹூம்” என்றாள் நளினி.
“ஆமாம்டி. நம்ம குரூப்ல இத போட்டு இவக்கிட்ட வாங்காதீங்கனு சொல்லணும்!”
வீட்டுக்கு வந்ததும் பையனோடு இறங்கிக் கொண்டாள். கவிதா அப்படியே வீட்டுக்கு கிளம்பினாள். உள்ளே வந்து புடவையை எடுத்து வைக்கப் பையைப் பிரித்தாள். அங்கே இரண்டுக்கு மூன்று புடவைகள் இருந்தது. ஒரு கணம் திருப்பிக் கொண்டுப் போய் கொடுக்கலாம் என்று நினைத்தாள்.
“ம்ம்ம்ம்... என்னைக் கிண்டல் செஞ்சாளே அவ. அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு. இந்த புடவய நாமளே வெச்சிப்போம்” என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள். டிவியை ஆன் செய்தாள்
லதாங்கி எல்லாப் புடவைகளையும் அதற்குரிய பையில் எடுத்து வைத்து மீண்டும் ஷெல்ஃப்பில் வைத்தாள். கடைசி புடவை எடுக்கும் போது அங்கே சுபத்ரா கேட்டது போலவே ஒரு ஐபாட் இருந்தது. இது நிச்சயம் அந்த நளினியின் பையன் விட்டுச் சென்றதாகத்தான் இருக்கும். அவர்களைக் கூப்பிட்டு கொடுக்கலாம் என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் தன்னுடைய நேரத்தை வீணடித்ததும் இல்லாமல் அவளிடம் வைரட்டியா இல்லை என்று இருவரும் பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. கையில் எடுத்த ஃபோனை வைத்துவிட்டு டிவியை ஆன் செய்தாள்.
அங்கே ரஜினியின் அண்ணாமலை படம் ஓடிக் கொண்டிருந்தது. தலைவர், “கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்” என்று ராதாரவியைப் பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தார். லதாங்கிக்கும், நளினிக்கும் அது ஒரு மன நிறைவைத் தந்தது அந்த டயலாக்!!

Wednesday, July 09, 2014
Recent movies I recommend to watch
Hollywood:
Taxi Driver
Nebraska
Flight
Babel
Minority report
Butch Cassidy and Sundance Kid
For a few dollars more
Once upon a time in the west
Good, bad and ugly
Two mules for sister sara
Shutter Island
Jack Reacher
Murder in the first
Crash
The Eiger Sanction
Toy Story 3
Up
Wall-E
Hotel Rwanda
Rain man
Pulp Fiction
Good will hunting
The Pianist
The Cider house rules
Miracle on the 34th street
12 Angry Men (I haven't seen it yet..)
Basic Instinct (For Sharon Stone :) )
City of God
Gandhi
Philadelphia
The Manchurian Candidate
Insomnia
Blood Work
Training Day
Philadelphia
Forrest Gump
21 grams
Django unchained
The kingdom
Collateral Damage
Broken arrow
Serpico
The Usual Suspects
Frozen Ground
Rabbit proof fence
The Road
The family (Italian gangsta movie)
Spanish
Biutiful
Amores Perros
Tamizh:
Madhayaanai kootam
Vaayai moodi pesavum
Goli Soda
Onaiyum aatukuttiyum
Soodhu kavvum
Pandiya naadu
Moodar Koodam
Vazhakku en 18/9
Kumki
Maina
Thuppaki
Vinnai thaandi varuvaaya
Vaththikuchi
Mariyaan
Korean:
I saw a devil (Must watch)
Chaser
My way
Oldboy
The man from nowhere
The kite runner
Iranian
Turtles can fly
Children of heaven
Song of sparrows
Stoning of Soraya
Malayalam:
Drishyam
Female 22 kottayam
Anayum Rasoolum
Diamond Necklace
Mumbai Police
Celluloid
Hindi
Zindagi naa milegi dobaara
taare zameen par
Barfi
Talaash
Oh My God
DevD
Kahaani
Special 26
Udaan
That girl in yellow boots
Vicky Donor
Band Baaja Baaraat
3 Idiots
8 X 10 Tasveer
Rocket Singh: Salesman of the year
Aashiqui 2
Rock on
Kai Po Che
Taxi Driver
Nebraska
Flight
Babel
Minority report
Butch Cassidy and Sundance Kid
For a few dollars more
Once upon a time in the west
Good, bad and ugly
Two mules for sister sara
Shutter Island
Jack Reacher
Murder in the first
Crash
The Eiger Sanction
Toy Story 3
Up
Wall-E
Hotel Rwanda
Rain man
Pulp Fiction
Good will hunting
The Pianist
The Cider house rules
Miracle on the 34th street
12 Angry Men (I haven't seen it yet..)
Basic Instinct (For Sharon Stone :) )
City of God
Gandhi
Philadelphia
The Manchurian Candidate
Insomnia
Blood Work
Training Day
Philadelphia
Forrest Gump
21 grams
Django unchained
The kingdom
Collateral Damage
Broken arrow
Serpico
The Usual Suspects
Frozen Ground
Rabbit proof fence
The Road
The family (Italian gangsta movie)
Spanish
Biutiful
Amores Perros
Tamizh:
Madhayaanai kootam
Vaayai moodi pesavum
Goli Soda
Onaiyum aatukuttiyum
Soodhu kavvum
Pandiya naadu
Moodar Koodam
Vazhakku en 18/9
Kumki
Maina
Thuppaki
Vinnai thaandi varuvaaya
Vaththikuchi
Mariyaan
Korean:
I saw a devil (Must watch)
Chaser
My way
Oldboy
The man from nowhere
The kite runner
Iranian
Turtles can fly
Children of heaven
Song of sparrows
Stoning of Soraya
Malayalam:
Drishyam
Female 22 kottayam
Anayum Rasoolum
Diamond Necklace
Mumbai Police
Celluloid
Hindi
Zindagi naa milegi dobaara
taare zameen par
Barfi
Talaash
Oh My God
DevD
Kahaani
Special 26
Udaan
That girl in yellow boots
Vicky Donor
Band Baaja Baaraat
3 Idiots
8 X 10 Tasveer
Rocket Singh: Salesman of the year
Aashiqui 2
Rock on
Kai Po Che