My world according to me

Thursday, August 30, 2012

A short story in Tamil

அன்று என‌க்கு நூறாவ‌து நாள். இந்த‌ தொழிலுக்கு வ‌ருவேன் என்று க‌ன‌விலும் நினைக்க‌வில்லை. வீட்டின் மூத்த‌ ம‌க‌ள். என‌க்கு பிற‌கு இர‌ண்டு த‌ங்கைக‌ள். அப்பா குடிகார‌ர். சொற்ப‌ பண‌மே வீட்டுக்கு கொடுப்பார். அம்மா வீட்டு வேலைச் செய்து வ‌ந்தாள். ஒரு வருட‌த்துக்கு முன் அப்பா இற‌ந்துவிட்டார். வேறு வ‌ழி இல்லை. வீட்டைக் காப்பாத்தியாக‌ வேண்டும். விருப்ப‌மே இல்லாம‌ல் இதில் சேர்ந்துவிட்டேன். யாருக்குத்தான் பிடிக்கும்? எங்க‌ளுக்கு எல்லாம் ஒரு சூப்ர‌வைச‌ர்(!!) அக்காதான் பொறுப்பு. எப்ப‌டி செய்ய‌ வேண்டும் என்று எங்க‌ளுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தாள்.

"ந‌ன்றாய் விரித்து காட்ட‌ வேண்டும். அவ‌ர்க‌ள் (வாடிக்கையாள‌ர்க‌ள்!!) திருப்தியாகும் வ‌ரைக் காட்டிக் கொண்டே இருக்க‌ வேண்டும். அவ‌ர்க‌ள் சென்ற‌வுட‌ன்.. வேக‌மாய் சுத்த‌ம் செய்ய‌ வேண்டும். அடுத்த‌ வாடிக்கையாள‌ருக்கு எப்போதும் த‌யாராக‌ இருக்க‌ வேண்டும். ரொம்ப க‌ச‌க்குவார்க‌ள்(!!) அதுக்கும் த‌யாராக இருக்க‌ வேண்டும். அழுக்கு செய்யாதீர்க‌ள் என்று நாசுக்காய் சொல்ல‌ வேண்டும்."

உட‌ல் வ‌ருத்தித்தான் இந்த‌ வேலைச் செய்ய‌ வேண்டியிருக்கு. அம்மாவுக்கு இஷ்ட‌மே இல்லை. எந்த‌ தாய்க்குத்தான் இதில் உட‌ன்பாடு? காலையில் சென்றால்.. இர‌வு வெகு நேர‌ம் செய்ய வேண்டியிருக்கும். கால் முத‌ல் த‌லை வ‌ரை எல்லாம் வ‌லிக்கும். ஓய்வுக்கு இட‌மேயில்லை. தின‌மும் த‌வ‌றாம‌ல் மாத்திரை சாப்பிட‌ வேண்டியிருக்கும். ஏதாவ‌து ஆகிவிட்டாள்? யார் ஆஸ்ப‌த்திரிக்கு போக‌ முடியும். இப்ப‌வே சூப்ர‌வைச‌ர் அக்கா சொல்லிவிட்டாள். தீபாவ‌ளி வ‌ருகிற‌து.. வாடிக்கையாள‌ர்க‌ள் நிறைய‌ வ‌ருவார்க‌ள். நாம்தான் பொறுப்பாய் காட்ட‌ வேண்டும். ம்ம்ஹும் என் த‌லைவிதி.. யாரைக் குத்த‌ம் சொல்லி என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம்? ஆனால் ந‌ல்ல‌ ச‌ம்ப‌ள‌ம். ச‌ம‌ய‌த்தில் பாராட்டுக் கிடைக்கும்! அம்மா ஒரு நாள் நான் செய்வ‌தைப் பார்த்து கண்ணீர் விட்டாள். பெற்ற‌ தாய் என்ன‌தான் செய்வாள்?

எப்ப‌டியோ ஒரு வ‌ழியாய் இன்றோடு நூறு நாள் முடிந்த‌து.. இந்த‌ துணிக்க‌டையில் சேல்ஸ்கேர்ள் வேலை தான் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ம் :)

Tuesday, August 21, 2012

க‌னிவாய் ம‌ல‌ர்ந்தாய் சுவாச‌மாய் பெண்மையே போற்றினாய்
அள‌வாய் குளிர்வாய் மெதுவாய் அழ‌காய் வீசினாய்
அன‌லாய் அதிர்வாய் க‌ன‌லாய் பேயாய் மிர‌ட்டினாய்
க‌ண‌க்காய் சூழ்ச்சியாய் வாரினாய் சுருட்டினாய் செல்வ‌மே

எத்தொழில் ந‌சிந்தாலும் மானிட‌ம் வாழும்
உழ‌வின்றி த‌ழைக்காது உல‌கு

இல்லான் இல்லா அர‌ண் உண்டெனில்
ய‌ங்கு பிற‌த்த‌ல் ந‌ன்று



Wednesday, August 01, 2012

Thalaivan, Thalaivi and Jasmine flower

த‌லைவி:

ம‌ஞ்ச‌த்தில் ஆருயிர் த‌லைவ‌னைக்கு இட‌முண்டு
வேறு யாரும் க‌ண்டாலே சின‌ம் கொள்வேன்
பூவே அவ‌ன் அருகில் உன்னை ம‌ட்டும்‌ அனும‌தித்தேன்
உன்னால் நான் அடைந்தேன் திக‌ட்டாத‌ இன்ப‌ம்
உன்னை ம‌ன்னித்தேன் போ!

த‌லைவ‌ன்:

என்ன‌வ‌ள் சிந்திய‌ அமுதை ப‌ருகினாய் நீயும்
உன்னில் உள்ள‌ தேன் க‌ச‌ந்த‌த‌னால் வாடினாயோ?
க‌ண்ட‌வைக‌ளை க‌ளிப்பில் சொல்லாதே வெளியே
உன் தேன் ப‌ருகாம‌ல் என்ன‌வ‌ளின் தேன் ப‌ருக‌க்
காத்திருக்கும் வ‌ண்டின‌ங்க‌ள் கேட்டுவிடும்
பின்ன‌ர் ஊர் பேசும் எங்க‌ள் களியாட்ட‌ங்க‌ள்..
சீ சீ பூவே மௌன‌ம் கொண்டிரு!

பூ

க‌ண்ட‌வை கூறேன்
என்னிலை ம‌ற‌ந்து
க‌ளிப்பில் பித‌ற்றுவேனோ
வ‌ண்டினங்க‌ள் கேட்குமோ
அவைக‌ளுக்கு புரியாதோ
என் செய்வேன்!
மரிக்குமுன் நான்
வேண்டுவ‌து இதுவே
ம‌றுஜென்ம‌ம் உண்டெனில்
த‌லைவ‌ன் த‌லைவி நீவிர்
எடுங்க‌ள் பூப்பிற‌வி
அப்போது உரைக்காது
இருப்பீரோ?!